ஆஸ்திரேலியாவில் வேலை செய்த நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 30 மில்லியன் பவுண்டு வரை மோசடி செய்து உள்ளார் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர்.
அத்துடன் கணவனின் பங்குபற்றுதலுடன் கம்பனியின் மேலதிகாரியுடன் செக்ஸ் வைத்து இருக்கின்றார்.
பெண் ஒருவரால் ஆஸியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற மிகப் பெரிய நிதி மோசடி இதுவே ஆகும்.
இப்பெண்ணின் பெயர் ரஜினா சுப்பிரமணியம். வயது 43.
இவர் மேற்சொன்ன நிறுவனத்தில் சில காலம் கணக்காளராக பணியாற்றி இருக்கின்றார்.
மோசடி செய்த பணத்தில் ஏராளமான நகைகள், வீடுகள் என்று வாங்கி இருக்கின்றார். இதில் பல்லாயிரக் கணக்கான பவுண்டை சக ஊழியர்களுக்கும் வாரி கொடுத்து இருக்கின்றார்.
இவருக்கு எதிரான மோசடி வழக்கு நியூ சவுத் வோல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இவர், இவரது கணவன், மேலதிகாரி ஆகியோர் ஒன்றாக செக்ஸ் வைத்து வந்திருக்கின்றனர் என்றும் ஹோட்டல் அறைகளில் அல்லது மேற்சொன்ன தம்பதியின் வீட்டில் செக்ஸ் நடத்தப்பட்டு வந்து இருக்கின்றது என்றும் நீதிமன்றம் கண்டு கொண்டது.
இவர் ஒரு நேர மதிய போசனத்துக்காக ஹோட்டலில் பல மில்லியன் பவுண்டு செலவு செய்து இருக்கின்றார் என்றும் Tiffany, Tag Heuer, Bulgari,Paspaley போன்ற நகைக் கடைகளில் இருந்து மொத்தமாக 600 நகைத் துண்டங்களை வாங்கி இருக்கின்றார் என்றும் நீதிமன்றம் அவதானித்தது.
இவருக்கு எதிரான மோசடிக் குற்றம் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டமையை தொடர்ந்து நீதிமன்றம் 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.
Post a Comment