கடந்த காலங்களில் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை நடைமுறை என்பது ஒரு புனிதத் தன்மை கொண்டதாக, உறுதியான, நிலையான, உண்மைத் தன்மை கொண்டதாக இருந்து வந்தது.
ஆனால் தற்போது அத்தனையும் அடியோடு நிராகரிக்கப்பட்டு, மேலத்தேய கலாசாரம் வேரூன்ற ஆரம்பித்த நாள் முதல் இழிவான நிலைக்கு அப் பெண்களின் வாழ்வு தள்ளப்பட்டுள்ளது.
கண்டவுடன் காதல், காலையில் கட்டிலில் சங்கமம் என்ற ஒரு வேகமான, முட்டாள்த்தனமான செயற்பாடாக தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொண்டனர் தமிழ்ப் பெண்கள்.
இது அத்தனைக்கும் ஒரு வகையில் பெற்றோர்களும் பொறுப்பாக இருந்தாலும் கூட, பெண் பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை, தங்களின் கலாசாரம் என்பவற்றைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் அதுவும் தமிழர் பகுதிகளில் தற்போது அரங்கேறும் கேவலங்கள் வார்த்தைகளாலோ அல்லது வரிகளாலோ விபரிக்க முடியாததன்று.
கடந்த கால யுத்தம் ஒரு வகையில் காரணமாக அமைந்தாலும் கூட, கற்பு என்று வருகின்றபோது அதனை எக் கஷ்டம் வந்தாலும் கட்டிக்காக்க வேண்டியது தமிழ்ப் பெண்களின் கடமை.
அந்த கட்டிக் காப்பதில்தான் அடங்கியுள்ளது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் கலாசாரம்.
ஆனால் தற்போது என்ன நடக்கிறது? காதல் என்ற வலையில் சிக்கி, காமம் என்ற போர்வையில் கட்டிலில் படுப்பது வரை அத்தனை நடவடிக்கைகளும் காணொளிகளாகப் பதியப்படுகின்றது.
தமிழ்ப் பெண்களைக் காதலில் விழ வைத்து கான்போனில் அவளுடன் தான் இருக்கும் அத்தனை உல்லாசத்தையும் படம்பிடித்து இணையத்தளங்களில் காணொளியாகக் காண்பிக்கப்படுகின்றது.
இவ்வாறு தங்களின் நிர்வாணக் காட்சிகள் இணையங்களில் உலா வருகின்றது என்பது பலருக்குத் தெரியாது இருந்தாலும், தெரிந்த பெண்கள் தொடர்ந்தும் தொடர்ந்தும் இதே தவறுகளைச் செய்து இறுதியில் விபச்சாரி என்ற தலைப்புக்குக் கீழ் வருகின்றாள்.
ஒரு கன்னியமான, கற்புக்கரசியை காதல் வலையில் விழுத்தி இறுதியில் விபரச்சாரியாக்குகின்றான் காதலன் என்ற காம வெறியன்.
அத்துடன் தன்னை நிர்வாணமாகப் படம் பிடிப்பவன் தன்னைத் திருமணம் செய்யப் போறவன் தானே என்ற ஒரு தப்பான நினைப்புடன், நம்பிக்கையுடன் நடந்து கொள்ளும் பெண்களின் உடல்கள் இறுதில் இணையங்களில் அனைவரினதும் கண்களுக்கு விருந்தளிக்கின்றது.
இதுதான் தற்போது இலங்கையில் நடந்தேறி வருகின்றது. எனவே இது விடயத்தில் காவல்துறை, நீதித்துறை ஆகியன இணைந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவது இன்றியமையாததாகவுள்ளது.
அப்போதுதான் இலங்கையின் நீதிபரிபாலனங்கள் மீது பொதுமக்களுக்கு நல்லதொரு அபிப்பிராயம், நம்பிக்கை வருவதற்கு வழியமைக்கும். அத்துடன் தமிழ்ப் பெண்களின் அவலங்களையும் தடுத்து நிறுத்த முடியும்.
எனவே இதுபோன்ற சம்பவங்கள் தற்போது இலங்கையின் தமிழர் பகுதிகளில் மலிந்து வருகின்றது. பெண்களும் சரி, அவர்களைப் பெற்றவர்களும் சரி ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியது இன்றைய சூழலில் அதி முக்கியமானதாக அமைகின்றது.
தெளிவின்மை, ஆசை வார்த்தைகளில் மயங்கி தப்பானவர்களை நம்புவது என்பதுதான் இறுதியில் இணையங்களில் ஆபாசப் படமாக மாறுகின்றது.
பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து ஒரு கண்ணோட்டத்தைச் செலுத்தி, அவர்கள் வித்தியாசமான பாதையில் பயணிப்தைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் தற்போது இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடைபெறும் செயற்பாடுகள் நெஞ்சை உருக வைக்கின்றன, பதற வைக்கின்றன.
Post a Comment