திருமங்கலம் பகுதியில் ஒரு சலூன் கடையில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருமங்கலம் இன்ஸ்பெக்டர் பிராங்டி ரூபன் தலைமையிலான போலீசார், திருமங்கலம் 13வது மெயின் ரோடு நேரு நகரில் உள்ள ரிங்க்ஸ் பேமிலி சலூனில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு ரகசிய அறையில் மசாஜ் என்ற பெயரில் 3 இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை போலீசார் மீட்டனர்.
அவர்களை அழகுகலை நிபுணர் என்று வேலைக்கு சேர்த்து விட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விருகம்பாக்கம் சின்மயா நகரை சேர்ந்த திரிவேணி(40), கொளத்தூரை சேர்ந்த கார்த்திகேயன்(27), மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த குமார்(26), பாடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் மயிலாப்பூர் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சலூன் கடை உரிமையாளர் கேகே நகரை சேர்ந்த பாலாஜியை தேடிவருகின்றனர்.
Post a Comment