இந்திய இணையத்தளங்களை வங்க தேச ஹாக்கிங் குழுவொன்று முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Bangladesh Cyber Army என தங்களை குறிப்பிடும் இக்குழுவினர் இது தொடர்பாக அவர்கள் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
வங்க தேச எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், எமது மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படுகொலைகளுக்கு பழிவாங்கும் வகையிலேயே இந்நடவடிக்கையை தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்கு சந்தை தொடர்பான Paisacontrol.com, bsf.nic.in உட்பட பல இணையத்தளங்களை முற்றாக சீர்குலைத்துள்ள இவர்கள், தங்களது ஹேக்கிங் குழுவின் இணையத்தளத்தில், வங்க தேச எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்யப்படும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.
Post a Comment