சென்னை திருமங்கலத்தில் மசாஜ் கிளப்' என்ற பெயரில், விபசாரத்தில் ஈடுபட்டதாக ஆந்திர அழகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் மசாஜ் கிளப்' என்ற பெயரில், விபசாரம் நடப்பதாக போலீசுக்கு நிறைய புகார்கள் வந்தன. இதுதொடர்பாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சங்கர், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கலிதீர்த்தான் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக அண்ணாநகர் பகுதியில் அதிரடி சோதனை வேட்டை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் 13வது மெயின் ரோட்டில் உள்ள நேரு நகர் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் மசாஜ் கிளப்' என்ற பெயரில் கடந்த 10 நாட்களாக விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன் தினம் இரவு அங்கு தனிப்படை போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினார்கள்.
அந்த சோதனையில் குறிப்பிட்ட பங்களா வீட்டில் 3 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது கண்டறியப்பட்டது. அந்த இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அந்த பங்களாவில் ஏ.சி.வசதியுடன் 3 சொகுசு அறைகள் இருந்தன. அங்கு மசாஜ் மட்டும் செய்ய வேண்டுமென்றால் ரூ.1500 கொடுக்க வேண்டும் என்றார்கள்.
அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்ததும் கண்டறியப்பட்டது. அந்த விபசார விடுதியை நடத்தியதாக திரிவேணி (வயது 40) என்ற ஆந்திர அழகி கைது செய்யப்பட்டார்.
இவர் ஏற்கனவே விபசார வழக்கில் ஜெயிலுக்கு போனவர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக போலீசாரிடம் தெரிவித்தார். இவரது ஒரே மகள் சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் திரிவேணிக்கு உதவியாக செயல்பட்ட கார்த்திகேயன் (27), குமார் (26), ஆனந்த் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட திரிவேணி உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 3 இளம் பெண்களும் சென்னை மைலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.
Post a Comment