நடிகை கார்த்திகாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.
தூத்துக்குடி படத்தில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. அவரும், ஹரியும் வரும் கருவாப் பையா, கருவாப் பையா பாட்டு மிகவும் பிரபலம். அதைத் தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்தார். வாய்ப்பு குறைய ஆரம்பித்தவுடன் புதுக்கோட்டை அருகே உள்ள சொந்த ஊருக்கு பேக்கப் செய்தார். இந்த ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக அவரது அம்மா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கார்த்திகாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் அவர் தற்போது கணவர் வீட்டில் வசித்து வருகிறாராம். இது குறித்து சென்னையில் உள்ள அவரது உறவினர்களிடம் கேட்டதற்கு, நிச்சயதார்த்தம் மட்டும் தான் நடந்துள்ளது என்றனர்.
கார்த்திகா மீண்டும் சினிமாப் பக்கம் போவதை விரும்பாத அவரது குடும்பத்தார் அவருக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
Post a Comment