'தினம் ஒரு புது நடிகைகள் வராங்க... மார்க்கெட் சரியாம என்ன பண்ணும்' என்கிறார் ஸ்ரேயா.
எனக்கு 20 உனக்கு 18 மற்றும் மழை படங்களின் தோல்வியால் தமிழின் ராசியில்லாத நடிகையாக இருந்த ஸ்ரேயா, ரஜினியுடன் சிவாஜியில் நடித்த பிறகு உச்சத்துக்குப் போனார்.
கோடிகளில் சம்பளம், தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில் குவியும் வாய்ப்புகள் என பயங்கர பிஸி.
ஆனால் வடிவேலுவுடன் ஒரு குத்தாட்டம் போட ஒப்பந்தமானார். உடனே அஜீத் இவரை தனது படத்திலிருந்து விலக்கினார். அதிலிருந்து இறங்குமுகம்தான் .
இன்றைக்கு தமிழில் படமில்லை அம்மணிக்கு. இந்திப் படம் இருக்கு, ஆங்கிலப் படம் இருக்கு என்மறு சொல்லி வருகிறார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட்டில் ஆட்டம் போடுவதில்தான் அவர் பொழுது போகிறது.
இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டால், "வாய்ப்பில்லை என்று நான் கவலைப்படப் போவதில்லை. தினமும் நிறைய புது நடிகைகள் வந்து கொண்டிருந்தால் பழைய நடிகைகள் வாய்ப்பு குறையாமல் என்ன செய்யும்...
அதற்காக புது நடிகைகளை வரக்கூடாது என்றா சொல்ல முடியும்... நான் சினிமாவில் அறிமுகமான போது நிறைய சீனியர் நடிகைகள் என்னை வரவேற்றனர். அதே மாதிரி தான் நானும் வரவேற்கிறேன். நிறைய படங்களில் நடித்து விட்டேன்.
இப்போதும் நிறைய படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன். எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியுமோ அதுவரை நடிப்பேன்," என்கிறார்.
Post a Comment