உத்தர்க்காண்ட் மாநிலத்தில் வீட்டுத்திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது குழந்தையை சிறுத்தை கவ்விக்கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை தேடும் பணியினை வனத்துறையின் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தர்க்காண்ட் மாநிலம் டெஹரிகர்வால் மாவட்டத்தில் பஹாலிங்கானா பகுதியைச் சேர்ந்த ஜோதிர்குமாரி வயது 4. இவர் சம்பத்தன்று தனது வீட்டு திண்ணையில் விளையாடி கொண்டிருந்தார்.
நேற்று கிராமப்பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஜோதிர்குமாரியை, கழுத்துப்பகுதியை பிடித்து கவ்விச்சென்றது. இதனை பார்த்த அவரது தாய், பாட்டி ஆகியோர் அலறியடித்து கூச்சல்போட்டனர். எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையுடன் வனப்பகுதியில் மறைந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் பொலிசார் நேற்று மாலை வரை குழந்தையினை தேடினர்.
இந்நிலையில் வனப்பகுதியில் குழந்தை கிடைத்ததாகவும், அவரது உடல்மீட்கப்பட்டு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் குடும்பத்தினருக்க ரூ. 1 லட்சம் உத்தர்க்காண்ட் அரசு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment