News Update :
Home » » விஜயகாந்த் வாயை மட்டுமல்ல....-நேரு விளாசல்

விஜயகாந்த் வாயை மட்டுமல்ல....-நேரு விளாசல்

Penulis : karthik on Thursday, 12 January 2012 | 01:43

தே.மு. தி.க. , வின் மேட்டூர் எம்.எல்.ஏ. , மேல் வழக்கு போட்டு ,
அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க.
, தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல , அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளார்
என்று பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சியில் நடந்த கூட்டத்தில்தான் நேரு இப்படிப்பேசினார். அத்தோடு
நிற்கவில்லை நேரு , மேற்கு வங்கத்தில் காங்கிரஸை எட்டி உதைத்த மம்தாவைப்
போல தமிழகத்திலும் திமுக காங்கிரஸை எட்டி உதைக்க வேண்டும் , மேற்கு
வங்கத்தில் தேர்தல் வந்ததைப் போல தமிழகத்திலும் வரும் என்றும் அவர்
பேசியுள்ளார்.
திருச்சி மாநகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு
நேரு பேசினார். தனது பேச்சில் காங்கிரஸை மறைமுகமாகவும் , விஜயகாந்த்தை
படு பச்சையாகவும்விமர்சித்தார். அவரது பேச்சிலிருந்து சில...
தமிழ்ப் புத்தாண்டு
தி.மு.க. , வினர் , தைத் திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக
கொண்டாட வேண்டும். தங்களின் வீடுகளில் கோலமிடும் போது தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் என்று எழுதியும் , முடிந்தால் புத்தாடை அணிந்தும் ,
வீடுகளில் கட்சிக் கொடியேற்றியும் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும்
என்றார் நேரு.
காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லி மம்தா
அறிவித்தார். இதையடுத்து , காங்கிரஸ் சிறிது இறங்கி வந்தபோதும் , மம்தா
அதெல்லாம் முடியாது என்று கூறி , காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு
எதிராக களம்காண தயாராகி விட்டார். அதுபோல் , இங்கும் வெகுவிரைவில்
நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும் என்று ஒரே நேரத்தில்
ஜெயலலிதா அரசு கவிழும் என்றும் , காங்கிரஸை திமுக உதறும் என்றும் அவர்
சூசகமாக பேசினார்.
அடுத்து விஜயகாந்த்
நம்முடைய போதாத காலம் அ.தி. மு.க. , வுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்தார்.
அவருடைய தயவில் ஜெயித்த அ.தி.மு.க. , அக்கட்சியை எட்டி உதைத்து விட்டது.
தே.மு. தி.க. , வின் மேட்டூர் எம்.எல்.ஏ. , மேல் வழக்கு போட்டு ,
அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க.
, தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல , அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளார்
என்று நேரு பேசியபோது குறிப்பாக கடைசி வார்த்தையை அவர் சொன்னபோது
கூட்டத்தில் அமோக கைத்தட்டல்.
தோற்றது ஏன் ?
திருச்சியில் திமுக தோற்றதற்குஎன்ன காரணம் என்பது குறித்து அவர்
கூறுகையில் , கடந்த எம்.பி. , தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டசபையில் மட்டும்
தோற்று , திருச்சி எம்.பி. , தொகுதியை இழந்தோம். அதுமட்டும் நடக்காமல்
போயிருந்தால் , ஜெயலலிதா இங்கு வந்திருக்கமாட்டார். அ.தி.மு.க. , வும்
ஆட்சிக்கு வந்திருக்காது.
தமிழகத்தில் புதிதாக ஓட்டுரிமைபெற்ற , 30 லட்சம் இளம் வாக்காளர்களிடம்
நம்மைப் பற்றிஅவதூறு பரப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் கூற நாம்
தவறிவிட்டோம். ஆகையால் , மாற்றத்தை எதிர்பார்த்த , அந்த இளம்
வாக்காளர்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டனர் என்று காரணம் கூறினார் நேரு.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger