News Update :
Home » » குஷ்பு... நதியா... நான்..!

குஷ்பு... நதியா... நான்..!

Penulis : karthik on Thursday, 12 January 2012 | 04:55

தமிழ்த்திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு கனவுக்கன்னியாக வலம்
வந்தவர் சிம்ரன். இவரின் உடுக்கை இடுப்பு நடனத்துக்கு தமிழ் ரசிகர்கள்
கிறங்கித்தான் போனார்கள். அதன் பிறகு தன் காதலரைக் கரம் பிடித்து மும்பை
சென்றவர், ஓரிரு வருடங்களிலேயே சென்னை திரும்பினார். ஆனால், அப்போது கதவு
திறந்தது சின்னத்திரை உலகம்தான். இப்போதுஜெயா டிவியில் "ஜாக்பாட்'
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
"ஜாக்பாட்' நிகழ்ச்சியை நீங்கள்தொகுத்து வழங்க கேட்டபோது, தமிழ் நன்றாகப்
பேச முடியும்னு நம்பிக்கை இருந்ததா?
எனக்கு பேஸிக்கான தமிழ் தெரியும். ஆனால் "ஜாக்பாட்' நிகழ்ச்சியைப்
பொருத்தவரை கேள்விகள் எல்லாம் சுத்தமான தமிழ் உச்சரிப்பில்
இருக்கணும்.அப்போதான் நிகழ்ச்சி பார்ப்பதற்கும், நான் பேசுவதை
கேட்பதற்கும் நல்லாருக்கும். அதனால் உச்சரிப்புகள் சரியாக வருவதற்காக
கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். மற்றபடி நிகழ்ச்சி தொகுத்து
வழங்குவதிலோ அல்லது பேசுவதிலோ எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
குஷ்பு இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது காஸ்ட்யூம்களுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.. நீங்கள் எப்படி?
இந்த கேம் ஷோ பொருத்தவரை ரிச்சான காஸ்ட்யூம்தான் தேவைப்படுகிறது.
ஏனென்றால், நான்முன்பே சொன்னது போல இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை
பெண்கள்தான் விரும்பிப் பார்க்கிறார்கள். சாதாரண காஸ்ட்யூமில் வந்தால்
ஒரு அட்ராக்ஷனாக இருக்காது. அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியைச் சின்ன
ஆர்ட்டிஸ்ட் யாரும் தொகுத்து வழங்கவில்லை. முதலில் குஷ்பு மேடம்
பண்ணாங்க, அடுத்து நதியா மேடம்.. இப்போ நான்! அதனாலதான் இந்த
நிகழ்ச்சிக்கு காஸ்ட்யூம்க்கு முக்கியத்துவம்நிறைய கொடுக்கிறோம்.
சின்னத்திரை எப்படி இருக்கு?
சின்னத்திரையைப் பொருத்தவரை இப்போ மிகப் பெரிய அளவில்
வளர்ச்சியடைந்திருக்கிறது. தகவல் தொடர்புலயும் சரி, பொழுதுபோக்கிலும்
சரி.. தமிழ்நாட்டில் டிவி அசுர வளர்ச்சியடைஞ்சிருக்குன்னு சொல்லலாம்.
முன்னாடி ஒரு சேனல், ரெண்டு சேனல்தான் இருந்தது. ஆனால் இப்பொழுது
அப்படியில்லை ஏகப்பட்ட சேனல்கள் வந்துவிட்டது. ஒவ்வொரு சேனலிலும்
வித்தியாசமான நிகழ்ச்சிகள் நிறைய வந்து கொண்டிருக்கிறது. இன்றைய
சூழ்நிலைûயில் சினிமாவைத் தாண்டி டிவி வளர்ந்திருக்கிறது.சில சமயங்களில்
டிவியில் நல்ல புரோகிராம் இருந்தால், படத்திற்கு டிக்கெட்
எடுத்திருந்தால் கூடப் போகாமல் டிவி பார்க்கிறாங்க. அப்படி ஆகிடுச்சு.
அந்தளவிற்கு டிவி முன்னேற்றம் அடைஞ்சிருக்கு.
சினிமா நாயகிகள் நிறைய பேர் சின்னத்திரை நாயகிகள் ஆகிட்டாங்க.. நீங்க
எப்போ சீரியல் நாயகி ஆகப்போறீங்க?
இப்போதைக்கு எனக்கு சீரியலில் நடிக்கும் ஐடியா கிடையாது. 2008-ல் ஒரு
தொடரில் நடித்திருந்தேன். அதுவும் டெலிவிஷன் சினிமா மாதிரியானது. அதாவது
டெலிபிலிம் மாதிரி. அந்த புரொகிராம் ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. அதில்
ஒரு மாதத்திற்கு ஒரு கதை என்று 12 மாதத்திற்கு 12 கதை வந்தது.
அந்தநிகழ்ச்சியின் பெயரே "சிம்ரன் திரை' என்று வைத்திருந்தார்கள்.
அப்படித்தான் நடித்திருந்தேன். மற்றபடி வருடக் கணக்கில் ஒரே தொடரில்
நடிக்க இப்போதைக்கு எனக்கு ஐடியா இல்லை.
சிலிம்ரனை இப்போ காணோமே?
சமீபத்தில் தான் எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. அதுதான்
நான்வெயிட் போட்டதற்குக் காரணம். டிவி நிகழ்ச்சிகளுக்கு
இப்படியிருந்தால்தான் நல்லது. நான் என்ன இனி பெரிய திரையில் நாயகியாகவா
நடிக்கப் போறேன்?
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger