News Update :
Home » » ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இந்தியா நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள்- அன்னா கடும் சாடல்

ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இந்தியா நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள்- அன்னா கடும் சாடல்

Penulis : karthik on Tuesday, 27 December 2011 | 03:50


Anna Hazare
Iடெல்லி: எனது உண்ணாவிரதத்தை நான் வாபஸ் பெற மாட்டேன். இறுதி வரை போராடுவேன். நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை பேருமே குற்றவாளிகள். எங்களை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. உ.பி. உள்பட சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் நான் பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹசாரே.

மும்பையில் இன்று காலை தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஹசாரே. அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார்.

இன்று பிற்பகல் அன்னா பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாகவே நான் உணவு எதையும் உட்கொள்ளவில்லை. எனக்கு காய்ச்சல் இருப்பதாக இன்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் எனது நாட்டுக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய நான் முடிவு செய்து விட்டேன். கடந்த 25 வருடமாக ஊழலுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். நான் மரணத்திற்குப் பயப்படவில்லை.

தேர்தல்கள் வருகின்றன. அந்த ஐந்து மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க அரசுக்கு உரிமை இல்லை. கிராம சபையின் அனுமதியை அவர்கள் முதலில் பெற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை. நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் அத்தனை பேருமே குற்றவாளிகள். குண்டர்கள், ரவுடிகள்தான் இன்று அரசியலுக்கு வருகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் நாடாளுமன்றம். மக்கள்தான் உயர்ந்தவர்கள். நாம்தான் இந்த நாட்டின் உரிமையாளர்கள். நாம்தான் இந்த நாட்டுக்காக எம்.பிக்களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வு செய்கிறோம். அப்படி இருக்கும்போது அவர்களை வேண்டாம் என்று சொல்லவும் நமக்கு உரிமை தரப்பட வேண்டும்.

பண போதை, அதிகார போதையால் மத்திய அரசு பலமுறை நமக்குத் துரோகம் இழைத்துள்ளது. இதை பாபா ராம்தேவுக்கும் முன்பு அவர்கள் செய்தார்கள். எனது போராட்டத்தில் வந்து இணையுமாறு நான் ராம்தேவை அழைத்துள்ளேன். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். நாளை அல்லது நாளை மறு நாள் அவர் நம்முடன் இணைய வருவார் என்றார் அன்னா.

கிரண் பேடி, கேஜ்ரிவால் கவலை

முன்னதாக தனது காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள அன்னா ஹசாரேவின் உடல் நலம் மோசமடைந்து வருவதால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

இதுகுறித்து கிரண் பேடிகூறுகையில், அன்னாவின் உடல் நிலை சரியில்லை. அவருக்கு காய்ச்சல் அடிக்கிறது. அவர்தனது உண்ணாவிரதத்தை மட்டும் நிறுத்திக் கொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

இன்னொரு உறுப்பினரான மனீஷ் சிசோடியா கூறுகையில், அன்னாவின் மோசமடைந்து வரும் உடல் நிலை எங்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்றார்.

அதேபோல அரவிந்த் கேஜ்ரிவாலும், அன்னா தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அன்னா தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளோம். தற்போது அன்னாவுடன் நாங்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் என்றார்
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger