விஜயகாந்த் கைதை கண்டித்து ஆரணியில் தொண்டர் தீக்குளிக்க முயற்சி: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் பாபுமுருகவேல் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது, நகர கேப்டன் மன்ற நிர்வாகி மனோ, காரில் இருந்து பெட்ரோலை பிடித்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Post a Comment