பிள்ளையாரின் உருவத்தில் கண்டெடுக்கப்பட்ட தேங்காய்
தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் காணி உரிமையாளர் வெள்ளையப்பா என்பவர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறான சில மாறுபட்ட உருவங்களில் பிறப்பெடுப்பதென்பது வழமையாகி விட்ட ஒன்று. மனிதர்கள் கூட சில நேரங்களில் மாறுபட்ட வடிவங்களில் பிறப்பதும் தற்கால உலகத்தில் வினோதச் செய்திகளாகி வருகின்றது.
இவ்வாறு இருக்கும் போது ஒரு தேங்காய் பிள்ளையாரின் வடிவில் இருப்பது பெரிதும் ஆச்சரியமானதோ, அல்லது வணக்கத்துக்குரிய பொருளாகவோ கருத முடியாது.
அவ்வாறு வணங்கு பொருளாகக் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் அதில் ஏதோவொரு உள்நோக்கம் இருப்பது உறுதி. அதாவது இதன் மூலம் பணம் சம்பாதிப்பது, அல்லது அருள் வழங்குவதுபோன்று பாசாங்கு சென்று பணம் பறிப்பது போன்றன அரங்கேற்றப்படலாம்.
எனவே உலகம் பல முன்னேற்றங்களைக் கண்டு தற்போது விண்வெளியில் வீடு கட்டும் அளவுக்குப் போய் இருக்கும் நிலையில் ஆதிகால மூட நம்பிக்கையில் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமாவதை விடுத்து அன்றாட வாழ்க்கையின் அபிவிருத்தி தொடர்பில் சிந்திப்பதே எதிர்கால வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதாக அமையும்.
அதைவிடுத்து பிள்ளையார் வடிவில் வந்த தேங்காயைக் கத்தியால் தாக்கியதாகவும், பின் மன்னிப்புக் கேட்டு பத்து வாளி நீரால் அபிசேகம் செய்தாதகவும் தெரிவித்து மூட நம்பிக்கையின் உச்ச நிலையை உலகறியச் செய்யாதீர்கள்.
Post a Comment