கல்யாணத்துக்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அவரது மனசை கலைத்து மறுபடியும் நடிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது ஒரு டீம். இவர் லேட்டஸ்ட்டாக நடித்திருக்கும் தெலுங்கு படத்தில் சீதையாக நடித்திருந்தார் அல்லவா? அவருக்கு ஜோடியாக பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்த படம் ஆந்திராவில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் இரண்டு விரல்களை வைத்துக் கொண்டு பெரிய பெரிய ரயில்களையே கவிழ்த்துவிடும் தெலுங்கு ஹீரோக்கள், சட்டென்று ரிவர்ஸ் அடித்து பக்தி படங்களிலும் நடிப்பார்கள்.
வேடிக்கை என்னவென்றால் இரண்டு படங்களையும் ஓட வைத்து மேற்படி நடிகர்களை சேதுவாக்கி ரசிப்பார்கள் ஆந்திரா ரசிகர்கள். அப்படிதான் நாகார்ஜுனா நடித்த பல சரித்திரப்படங்கள் சில்வர் ஜூப்ளி கொண்டாடியிருக்கிறது. இப்போது பாலகிருஷ்ணாவின் படம் ஹிட் என்றதும் தானும் அதுபோலவே ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அதுவும் துணைக்கு நயன்தாரா வேண்டும் என்று நினைக்கிறாராம்.
ராம்கோபால் வர்மா இயக்கவிருக்கும் இந்த படம் ராவணனின் வாழ்க்கையை மையமாக கொண்டது. இதில்தான் சீதையாக நடிக்க வைக்க நயன்தாராவை தேடிக் கொண்டிருக்கிறார் நாகார்ஜுனா. திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று நயன்தாராவிடம் கேட்ட நிருபர்களுக்கு அதுபற்றி இப்ப எந்த முடிவுக்கு வரவில்லை என்றும் கூறியிருக்கிறார் அவர். இது போதாதா? நாகார்ஜுனாவின் -து£ண்டில் வசமாக வீசப்பட்டிருக்கிறது. சீதை என்ன முடிவெடுக்கிறாரோ?
Post a Comment