தன்னுடைய நடிப்பாலும், அழகான உடல் அமைப்பாலும், இளசுகளை தன் பக்கம் கவர்ந்திழுக்க வைத்தவர் நடிகை தமன்னா. தமிழில் கல்லூரி படம் மூலம் பிரபலமான அவர், விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, தனுஷ் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு ஜெட் வேகத்தில் வளர்ந்து வந்தார். திடீரென என்ன நடந்ததோ, தமிழ் சினிமாவே வேண்டாம் என்பது போல, தெலுங்கு பக்கம் தாவினார். கடைசியாக தனுஷ் உடன் வேங்கை படத்தில் நடித்தார் தமன்னா. அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் கமிட் ஆகமால் இருந்த தமன்னா, இப்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க நல்ல கதை கேட்டு வருகிறார்.
தமிழில் ஏன்...? இவ்வளவு இடைவெளி என்று தமன்னாவிடம் கேட்டால், தமிழில் இப்போதும் நடிக்க நான் தயாராகத்தான் உள்ளேன். ஆனால் நல்ல கதை அமையவில்லை. தற்போது தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படமும், ராம் உடன் படமும் நடித்து வருகிறேன். ராம் உடன் நடித்து வரும் படம் விரைவில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக இருக்கிறது. இதுதவிர தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏப்ரல் வரை தெலுங்கில் கொஞ்சம் பிஸியாக இருப்பதால், அதன்பிறகு தமிழ் படங்களில் கவனம் செலுத்த உள்ளேன். விரைவில் தமிழ் ரசிகர்களாகிய உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment