வீதிகள் தோறும் நமது அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது. இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும். இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.
இதையடுத்து வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான அளவில் இருக்கும் "எலைட் ஷாப்" என்ற பெயரில் மதுபான கடைகளை திறக்கவும், அது தவிர மாவட்டம் தோறும் ஐந்து இடங்களில் சாதாரண மதுபானகடைகளை திறக்கவும் கோட்ட முதுநிலை மேலாளருக்கு அதிகாரம் அளித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஐந்து சாதாரண டாஸ்மாக் கடைகளையும், இரண்டு "எலைட் ஷாப்" கடைகளையும் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள் மண்டல மேலாளர்கள்.
இந்த "பார்"களில் மற்ற "டாஸ்மாக்" பாரில் இருப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் "சேவை"க்கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு அலுவலர் கூறினார்.
அரசு மக்களுக்கு செய்யும் "நல்ல சேவை"
Post a Comment