'தல' அஜீத் குமார் ரொம்ப ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் என்று கூறியுள்ளார் த்ரிஷா.
நடிகை த்ரிஷா அஜீத் குமாருடன் கிரீடம், மங்காத்தா என்ற 2 படங்களில் நடித்துள்ளார். அதில் மங்காத்தா சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் த்ரிஷா மகிழ்ச்சியாக உள்ளார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்ததால் தான், தான் அதில் நடித்ததாக கூறுகிறார் த்ரிஷா.
அஜீத்துடன் 2 படம் நடிச்சிருக்கீங்க, அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். நேரடியாக எதையும் பேசக் கூடியவர், யாரையும் முன்னால் விட்டு பின்னால் பேச மாட்டார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரே பேசி விடுவார் என்றார்.
சரி விஜய் கூட நீங்க நடிச்ச கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாட்டு இன்னமும் தாளம் போட வைக்கச் செய்கிறது. த்ரிஷா, விஜய் ஜோடி சேர்ந்தாலே ஹிட் என்றெல்லாம் பேசப்படுகிறது. நீங்கள் இருவரும் சேர்ந்து ஏற்கனவே நிறைய படங்கள் நடித்திருக்கிறீர்கள். உங்கள் நண்பர் விஜய் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றதற்கு விஜய் ரொம்ப ஸ்டைலான நடிகர் என்று கூறினார்.
'தல' ஸ்ட்ரெய்ட் பார்வர்ட், 'இளைய தளபதி' ஸ்டைல் அப்போ 'சீயான்' விக்ரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர் திறமைகளின் மொத்த உருவம் என்று பளிச்சென்று பதில் கூறினார் த்ரிஷா.
ஆனால், சிம்பு பற்றி த்ரிஷா எதுவும் சொல்லவில்லை...!
Post a Comment