நடிகை த்ரிஷா வீட்டில் அட்டை பெட்டிக்குள் வைத்து 3 நாய்க் குட்டிகளை விட்டுச் சென்றுள்ளனர். காயம் அடைந்திருந்த அந்த நாய்க் குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து வளர்க்கிறார் த்ரிஷா. 'பாடிகார்டு' தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக கனடா சென்ற நடிகை த்ரிஷா, சமீபத்தில் சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு கேட் முன்பு ஒரு அட்டை பெட்டி இருந்தது. அதில் இருந்து நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே தனது அம்மா உமாவை அழைத்தார். அவர் வந்து அட்டை பெட்டியை திறந்து பார்த்த போது சில நாட்களுக்கு முன் பிறந்த 3 நாய்க் குட்டிகள் பெட்டிக்குள் இருந்தன.
அதைக் கண்டதும் உச் கொட்டியபடி அன்பாக தடவி கொடுத்த த்ரிஷா, அதில் ஒரு நாய்க் குட்டிக்கு காயம் இருந்ததை கண்டார். உடனே வீட்டுக்குள் சென்று ஆயின்மென்ட் எடுத்து வந்து காயம்பட்ட இடங்களில் தடவினார். பின்னர் கால்நடை துறை டாக்டரிடம் அழைத்து சென்று தடுப்பு ஊசி போட்டார். பின்னர் அதற்கு 'பட்டுÕ என்று பெயர் வைத்தார்.
இதுபற்றி த்ரிஷா கூறும்போது, Ô'அனாதையாக விடப்படும் தெரு நாய்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும். தெரு நாய்கள் மீது நான் பாசம் காட்டுகிறேன் என்று தெரிந்து என் மீது நம்பிக்கை வைத்து நாய்க் குட்டிகளை என் வீட்டு எதிரே விட்டு சென்றிருக்கிறார்கள். அவற்றை மீட்டு சிகிச்சை அளித்தேன். யாராவது வளர்க்க முன்வந்தால் அந்த நாய்க் குட்டிகளை அவர்களிடம் தருவேன். இல்லாவிட்டால் நானே வளர்ப்பேன்ÕÕ என்றார்.
Post a Comment