சென்னையில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் பியூட்டி பார்லர் ஸ்பா என்ற போர்வையிலும் அழகு கலை நிபுணர்கள் பெயரிலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங் ஆகியோர் உத்தரவிட்டனர்.
விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சாண்டியாகோ தலைமையில் போலீஸ் படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
விளம்பரங்களில் வெளி வந்த தொலைபேசி எண்களில் வாடிக்கையாளர்கள் போல போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.
அதற்கு மறுமுனையில் பதிலளித்த நபர் ஆழ்வார் பேட்டையில் எல்டாம்ஸ் ரோடு சந்திப்பிற்கு அழைத்து மாறு வேடத்தில் இருந்த போலீசாரை வாடிக்கையாளர்கள் என தவறாக நினைத்து தங்களது ஆழ்வார்பேட்டை-எல் டாம்ஸ் ரோட்டில் இயங்கி வந்த சுகோஸ்பா பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்று அங்கிருந்த அழகிகளை காட்டி ரூ. 5 ஆயி ரம் கொடுத்தால் உல்லாச மாக இருக்கலாம் என்று கூறினர்.
விபசாரம் நடப்பதை உறுதிபடுத்திக் கொண்ட போலீசார் பியூட்டி பார்லர் பொறுப்பாளர் சுனிதா என்பவரை கைது செய்து அங்கிருந்த அசாம் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 4 இளம்பெண்களை மீட்ட னர்.
மேலும் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பிரபல விபசார பெண் தாதாவும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவருமான கேரளாவைச் சேர்ந்த சுபா என்ற ஆன்சியின் மசாஜ் சென்டருக்கும் மாறு வேடத்தில் சென்ற போலீசார் விபசாரம் நடப்பதை உறுதி செய்து அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தி ஆன்சி மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட பாலாஜி (23) என்பவர்களை கைது செய்து அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 இளம்பெண்களை மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சென்னை மாநகரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் மற்றும் பியூட்டிபார்லர் என்ற போர்வையிலும் மற்றும் அழகு கலை நிபுணர்கள் என்ற பெயரிலும் வாடிக்கையாளர்களை மயக்கி கவர்ந்து விபசார தொழிலில் ஈபட்டு வரும் குற்றவாளிகள் மீதும் அவர்களுக்கு துணைபோகும் சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது போன்ற போலி விளம்பரங்களை கண்டு வாலிபர்கள் தவறான வழிகளில் சென்று ஏமாந்து போகக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment