அஜீத் இப்போது நடிக்கும் பில்லா பார்ட்2 படத்தை இயக்க இருந்தவர் விஷ்ணுவர்தன் தான். அஜீத் நடித்த பில்லா ரீமேக் படத்தை எடுத்து வெற்றி கண்டவர் விஷ்ணுவர்தன். ஆனால் திடீரென படம் கைமாறியது. கமல் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை இயக்கிய சக்ரி பில்லா பார்ட்-2வை இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்து வருகிறது.
இதனால் நானும் அஜீத்தும் அடுத்த படத்தில் இணைவோம் என்று சொன்னார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அதற்கான கதை விவாதங்களிலும் இருந்து வந்தார்.
இதற்கிடையே அஜீத் தன் அடுத்த படத்தின் கால்ஷீட்டை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னதிடம் கொடுத்திருப்பதாகவும், அஜீத் - ரத்னம் கூட்டணியில் இந்தியன் பார்ட்-2 உருவாகப் போவதாகவும் செய்திகள் வந்தன. இதற்காக ரத்னம் ஷங்கரிடம் பேசி வருவதாகவும் செய்திகள் கிடைத்தன.
இப்போது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் சந்தித்திருக்கிறார். பல மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் அஜீத்தின் அடுத்தப் படத்தைப் பற்றி முக்கிய விவாதம் நடந்ததாக தெரிகிறது.
ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக் வாய்ப்பு விஷ்ணுவர்தனுக்கு கிடைத்தது. கமல் நடித்த இந்தியன் படத்தின் பார்ட்-2 வை இயக்கும் வாய்ப்பு விஷ்ணுவர்தனுக்கு கிடைக்குமா என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
Post a Comment