News Update :
Powered by Blogger.

திவ்யாவுக்கு கவுன்சிலிங் நடக்குமா ?

Penulis : Tamil on Friday, 19 July 2013 | 05:48

Friday, 19 July 2013

தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4–ந் தேதி ரெயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். அவரது மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் டெல்லி டாக்டர்கள் 3 பேர் நடத்திய மறு பிரேத பரிசோதனை மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனால் இளவரசன் மரண சர்ச்சை முடிவுக்கு வந்தது.
கலப்பு திருமண விவகாரத்தில் தனது தந்தை நாகராஜ் மற்றும் கணவர் இளவரசன் ஆகியோரை இழந்து உள்ள திவ்யாவுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கோர்ட்டு உத்தரவு நகல் திவ்யாவுக்கு தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் மூலம் அனுப்பப்பட்டது. 20–ந் தேதி கவுன்சிலிங் பெற திவ்யா சம்மதம் தெரிவித்து இருந்தார். இதன்படி திவ்யா, அவரது தாயார் தேன்மொழி. தம்பி மணி ஆகிய 3 பேரும் நாளை கவுன்சிலிங் பெற வேண்டும்.
comments | | Read More...

இளவரசன் சாவு தற்கொலை: டெல்லி டாக்டர்கள் குழு உறுதிப்படுத்தியது

Penulis : Tamil on Wednesday, 17 July 2013 | 23:06

Wednesday, 17 July 2013

கருகிபோன இளவரசன் திவ்யா காதல்!

இளவரசன் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? உண்மையில் நடந்தது என்ன? ஒட்டு மொத்த தமிழகமும் இந்த கேள்விகளுக்கு விடை தேடியது. பொதுவாக ஒரு தற்கொலை என்றால் இ.பி.கோ. 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து அனாயசமாக கையாளும் போலீசார் இந்த வழக்கை அவ்வளவு எளிதாக கையாள முடியவில்லை. இடையில் புகுந்த சாதியும், சந்தேகமும் நீதி தேவன் கோவிலில் மண்டியிட்டது.
comments | | Read More...

சிம்புவும் ஹன்சிகாவும் , காதலுக்கு ஏது முற்றுப்புள்ளி

டந்த சில நாட்களாக சிம்புவும், ஹன்சிகாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பரவலாக செய்தி பரவிற்று. சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றிலும் சிம்புவின் அப்பாவான டிஆர், சிம்பு ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த பரவலான பேச்சால் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு ஹன்சிகா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“சிம்புவும், நானும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வெளியாகும் செய்திகளால், நான் மிகவும் வருத்தமடைந்திருக்கிறேன்.
எங்கள் இருவருக்குமிடையே காதல் எதுவும் இல்லை. இரண்டு படங்களில் சேர்ந்து நடிப்பதால் நண்பர்களானோம். அதை இப்போது காதல் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள்.
மற்ற ஹீரோக்களுடன் எப்படி பழகுகிறேனோ, அப்படியேதான் சிம்புவுடன் பழகி வருகிறேன்.
இப்போதைக்கு நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். என் திருமணம் என் குடும்பத்தார் விருப்பப்படிதான் நடக்கும். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் நான் மணப்பேன்,” என்று கூறினார்.
இதன் மூலம் இந்த வதந்திக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காதலுக்கு ஏது முற்றுப்புள்ளி….

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger