சட்டசபைத்தேர்தலிலும் அத்தனை கட்சிகளும் தனியாக போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், தேமுதிகவுக்கு ஒருசீட் கூட கிடைத்திருக்காது. ஆனால் எங்களுக்கு 6 சீட் கிடைத்திருக்கும் என்று பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதன் பயணம் தமிழகத்தில் 5 ஆண்டிற்கு ஆளும் கட்சியாக வேண்டும். இது முடியுமா? முடியாதா? நடக்குமா, நடக்காதா? என்று எண்ணிக் கொண்டிருக்க கூடாது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித் தனியாக நின்றதால் மூன்று கட்சிகள் லாபம் அடைந்திருக்கிறது. ஒன்று அ.தி.மு.க.,, இரணடாவது ம.தி.மு.க., மூன்றாவது பாரதீயஜனதா.
தமிழகத்தில் பா.ம.க. பிளவுபட்டுள்ளது. அக்கட்சி முக்கிய பிரமுகர்கள் என்னை சந்தித்திருக்கிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம்.
உள்ளாட்சி தேர்தலை போல அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தேர்தலையும் சந்தித்திருக்க வேண்டும். அப்படி தனித்தனியாக போட்டியிட்டிருந்தால் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது. பா.ஜ.க பெற்ற ஓட்டு விகிதத்தை பார்த்தால் ஆறு இடம் கிடைத்திருக்கும்.
இந்த நிலை மேலும் வளரும், பாஜக ஆளுங்கட்சியாக மாறும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
Post a Comment