News Update :
Powered by Blogger.

உ.பி.யில் புதையல் தோண்டும் பணியை கோர்ட் கண்காணிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு A sadhu dream of buried gold now reaches the Supreme Court

Penulis : Tamil on Friday, 18 October 2013 | 07:58

Friday, 18 October 2013

உ.பி.யில் புதையல் தோண்டும் பணியை கோர்ட் கண்காணிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு A sadhu dream of buried gold now reaches the Supreme Court

உன்னாவ், அக். 18-

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் தாண்டியா கிராமத்தில் உள்ள 19-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராம் பக்ஸ் சிங்கின் அரண்மனை உள்ளது. அந்த அரண்மனையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்திருப்பதாக மன்னர் ராம் பக்ஸ் சிங் தன் கனவில் வந்து கூறினார் என்று அப்பகுதி சாது சோபன் சர்க்கார் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த இடத்தில் புதையல் இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்காக தொல்பொருள் துறை ஆய்வுக்குழுவை மத்திய அரசு அனுப்பியது. அந்தக் குழுவினர் இன்று அரண்மனை வளாகத்தை தோண்ட ஆரம்பித்தனர்.

இந்த பணி முடிவடைய சுமார் ஒரு மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரண்மனை வளாகத்திற்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே, தங்கப்புதையலுக்கான தோண்டும் பணி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அரண்மனை வளாகத்தில் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றில் சில தங்கம் காணாமல் போகலாம். எனவே, புதையல் தோண்டும் பணியை கோர்ட் மேற்பார்வையிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

...

shared via

comments | | Read More...

ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காட்டுத்தீ: ஒருவர் பலி 1000 வீடுகள் எரிந்து நாசம் Forest wildfires in Australia man dead 1000 house fire

ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காட்டுத்தீ: ஒருவர் பலி 1000 வீடுகள் எரிந்து நாசம் Forest wildfires in Australia man dead 1000 house fire

மெல்போர்ன், அக். 18–

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வனப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 15 இடங்களில் காட்டுத்தீ பிடித்துள்ளது. காற்று வேகமாக வீசுவதால் தீ 'மளமள' வென பரவி கொளுந்துவிட்டு எரிகிறது.

இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள லேக் முன்மோர்க், சிட்னி, புளுமவுன்டெய்ன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீயணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன. அவை வானில் பறந்து தண்ணீரை பீய்ச்சி வருகின்றன. இருந்தும் முற்றிலும் தீயை அணைக்க முடியவில்லை.

இந்த காட்டு தீயில் சிக்கி 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தனது வீட்டை பாதுகாக்க முயன்ற போது தீயில் சிக்கி உடல் கருகினார்.

இந்த தீ விபத்தில் வனப் பகுதிக்கு அருகேயுள்ள 1000–க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. காட்டு தீயினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் அதன் அருகேயுள்ள சிட்னி நகர மேகங்களில் படிந்துள்ளது. இதனால் அந்த நகரம் மேக மூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

...

shared via

comments | | Read More...

சரோஜினி வரதப்பன் மறைவு: ஜெயலலிதா இரங்கல் Sarojini Varadappan died Jayalalithaa condoled

Penulis : Tamil on Thursday, 17 October 2013 | 08:36

Thursday, 17 October 2013

சரோஜினி வரதப்பன் மறைவு: ஜெயலலிதா இரங்கல் Sarojini Varadappan died Jayalalithaa condoled

Tamil NewsToday,

சென்னை, அக். 17-

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் மறைவு தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

பிரபல சமூக சேவகியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவத்சலத்தின் மகளுமான சரோஜினி வரதப்பன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தனது 92 வது அகவையில் இன்று (17.10.2013) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

இந்திய மகளிர் சங்கத்தின் தலைவராகவும், மயிலாப்பூர் அகடமியின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர் சரோஜினி வரதப்பன். 35 ஆண்டுகளுக்கு மேல் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்த சரோஜினி வரதப்பன், அதன் தலைவர் பதவியையும் சிறிது காலம் வகித்துள்ளார்.

கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சென்னை நகர ஷெரீப் ஆக பணியாற்றியவர். வயதான காலத்திலும் சமூக சேவை ஒன்றையே முழுமூச்சாகக் கொண்டு செயல்பட்டவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளுக்குச் சொந்தக்காரர்.  

அனைவரிடத்திலும் எளிமையாகவும், இனிமையாகவும் பழகக்கூடிய சரோஜினி வரதப்பன் மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger