News Update :
Home » » சசிகலா ஆதரவாளர்களின் ரகசியசெல்போன் பேச்சு: உளவுத்துறை திணறல்!

சசிகலா ஆதரவாளர்களின் ரகசியசெல்போன் பேச்சு: உளவுத்துறை திணறல்!

Penulis : karthik on Thursday, 26 January 2012 | 05:56

சசிகலா ஆதரவு அமைச்சர்கள் , உயர்அதிகாரிகள் , கட்சி நிர்வாகிகள் பலர்
தங்களது வழக்கமான செல்போன் எண்களை விட்டு விட்டு புதிய ரகசிய எண்களை
வைத்து தங்களுக்குள் செய்திளைப் பரிமாறிக் கொள்கிறார்களாம். இதனால்
அவர்களின் மூவ் குறித்துத் தெரியாமல் உளவுப் பிரிவு போலீஸார் திணறி
வருகின்றனராம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா சமீபத்தில்போயஸ்
கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட
அமைச்சர்கள் , ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை முதல்வர் ஜெயலலிதா
மாற்றம் செய்வார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் சசிகலா , ராணவன் , திவாகர் , மகாதேவன் , எம். நடராஜன் , பவனிவேல் ,
ராமச்டந்திரன் ஆகியோரது தீவிர விசுவாசிகளாக வலம் வந்த அமைச்சர்கள் பலர்
இன்றும் அமைச்சரவையில் இருக்கத் தான் செய்கின்றனர்.
அவர்கள் அனைவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. இந்த
நிலையில் அவர்கள் தங்கள் உறவினர்களின் பெயர்களில் புதியசெல்போன் எண்களை
வாங்கியுள்ளனராம். இதன் மூலமாகத்தான் தங்களுக்குள் பேசிக்
கொள்கின்றனராம்.
ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது கதையாக , மாலை நேரங்களில் தங்களது
அதிகாரப்பூர்வ பணிகளை நிறுத்தி விட்டு , ரகசிய ஆலோசனைகளில் மூழ்கி
விடுகிறார்களாம்.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள பலரும் இந்த ரகசிய ஆலோசனையில்
ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. யார் எந்த செல் எண்ணை
பயன்படுத்துகினறனர்என்ற தகவல் தெரியாததால் உளவுத்துறையினர் தகவல்
சேகரிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சசிகலாவுடன் தொடர்புடையவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் உளவுத்துறை
அலசி ஆராயந்து வருவது குறித்து அறிந்து வைத்துள்ள பலரும் மாவட்ட அளவில்
உள்ள உளவுத்துறை அதிகாரிகளை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து தங்களது
அதி முக்கிய தகவலகள் போயஸ் கார்டன் வரை செல்லாமல் பார்த்துக்
கொண்டார்களாம்.
இது குறித்து முதலில் உளவுத்துறை தலைமை விசாரணை நடத்தினால் பல அதிர்ச்சி
தகவல்கள் கிடைக்கும் என்கிறனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger