News Update :
Home » » அணு உலை அணு உலைன்னு கடுபேத்துராங்க மை லார்ட்..!

அணு உலை அணு உலைன்னு கடுபேத்துராங்க மை லார்ட்..!

Penulis : karthik on Thursday 26 January 2012 | 06:11

அணு உலை அமைப்பது பாதுகாப்பானதாஇல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல
வேண்டாம். இந்தியாவில் அணு உலை அமைப்பது பாதுகாப்பானதா என்பதை மட்டும்
நாம் பார்ப்போம். நமது நாடு ஊழல்நிறைந்த நாடு என்பதை நான் சொல்லித்தான்
தெரியவேண்டியது இல்லை .
உதாரணமாக போபாலில் நச்சு வாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கோரச்
சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னமும் கூட இந்த கோர
நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை
நீடிக்கிறது.
மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு
ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது.
இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால்
5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல்
ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியா வுக்கு
அழைத்து வந்து விசாரணை நடத்தப்படவில்லை. இதற்கு மத்திய அரசும்,
மத்தியப்பிரதேச அரசுமே காரணம் என்று தன்னார் வத் தொண்டு அமைப்புகள்
குற்றம் சாட்டுகின்றன.
விஷவாயு கசிந்த ஆலையிலிருந்து இன்னமும் கூட நச்சுப் பொருட்கள்முழுமை யாக
அகற்றப்படாத நிலை உள்ளது. 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த
ஆலையில் இன்னமும் கூட நச்சுப் பொருட் கள் உள்ளன. அதுமட்டுமல்ல உலகின் மிக
மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் போபால் விஷவாயு கசிவு
தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
விச வாயு கசிவுக்கு ஆளான யூனியன் கார்பைடு ஆலையை டவ் நிறுவனம் வாங்கி
நடத்தி கொண்டுதான் இருக்கின்றது. நம்மால் என்ன செய்ய முடிந்தது. அல்லது
நமது ஆட்சியாளர்கள் தான்என்ன செய்தார்கள். இந்த விபத்தால்
பாதிக்கப்பட்டது எந்த அரசியல் தலைவரும் அல்ல எல்லோரும் அப்பாவி மக்கள்
தான். அப்பாவி மக்கள் பாதிக்க பட்டால்அதர்க்காக இந்த நாட்டில் யார் கவலை
பட போகின்றார்கள். அவர்கள் ஆடு மாடு போன்றவர்கள் கேக்க நாதியற்றவர்களாய்
கோடிகணக்கில்இருகின்றார்கள் என்று இந்த ஆட்சியாளர்கள்
நினைத்துவிட்டார்கள்.
நடந்த ஒரு விபத்திற்கே இருபத்திஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது
இன்னும் முடிவு தெரிய வில்லை. இந்த லட்சணத்தில் அணு உலை அமைக்க சர்வதேச
ஒப்பந்தமாம். கடுபேத்துராங்க மைலார்ட்.
தானே புயல் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு நிவரனபநிகளை
முடிக்கிவிடவே நமது முதல்வருக்கு நேரம் இல்லை. கருணாநிதி பாதிக்க பட்ட
மக்களை காண போகின்றார் என்ற அறிவிப்பு வந்ததும். அவர் மக்களை சந்தித்து
நல்ல பெயர் எடுத்து விடுவாரோ என்ற நல்ல எண்ணத்தில் அவசர அவசரமாக
ஹெலிகாப்டரில் பறந்து வந்து கடமைக்கு சிலரை ஒரு திருமண மண்டபத்திற்கு
வரவைத்து பார்த்து விட்டு கிளம்பிவிட்டார். புயல் தாகி இருபத்தி ஐந்து
நாட்கள் ஆகியும்இன்னும் முழுமையாக மின்சாரம் தரப்படவில்லை.
இந்த லட்சணத்தில் அணு உலை விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும். நீங்களே
சிந்தித்து பாருங்கள்.முதல்வர் எங்கே விபத்துனடந்த பகுதிக்கு சென்றால்
கதிர்வீச்சு நம்மையும் பாத்திது விடும் என்று பயந்து போயஸ்
தோட்டத்தில்அமர்ந்து கொண்டு அறிக்கை கொடுப்பார். இந்த விபத்துக்கு
முழுக்க முழுக்க மத்திய அரசும் கருணாநிதியும் தான் காரணம். பாதிக்க பட்ட
மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒரு ஐந்து லட்சம்கோடி நிதி உடனே மத்திய அரசு
வழங்க வேண்டும் என்ற வகையில் அந்த அறிக்கை இருக்கும். நமது
ஆட்சியாளர்களின் லட்சணம் இதுதான் இவர்களை நம்பி எப்படி நாம் அணு உலை
அமைக்க முடியும். இங்கு அனைத்து துறைகளிலும் ஊழல்நிறைந்ததாகவே உள்ளது.
இந்தியாவில் அரசு நிறுவனங்களில் அடிமட்டத்தில் இருந்து ஆட்சியாளர்கள் வரை
யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இந்தியாவில் எல்லோருக்கும் ஒரு விலை
உண்டு. உச்சநீதிமன்றமே அரசு அலுவலகத்தில் ஒவொரு பணிக்கும் எவ்வளவு லஞ்சம்
என்பதை அரசே அறிவித்து விட்டால் மக்கள் சிரமம் இல்லாமல் அந்த தொகையை
செலுத்திவிட ஏதுவாக இருக்கும் என்று நய்யாண்டி செய்யும் அளவில் நமது
ஆட்சியாளர்களும் அரசு ஊழியர்களும் இருக்கின்றனர்.
அணு உலை அமைப்பதற்கு முன்னாள் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குங்கள் பிறகு அணு
உலைகளை உருவாக்கலாம்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger