கூடங்குளம் : 3 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு கூடங்குளம் : 3 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு
கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதை உடனே கைவிட வலியுறுத்தி இடிந்தகரையில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் கடற்கரையில் நடந்த தடியடி மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து இடிந்தகரை தேவாலயத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்திய 48 மணி நேர உண்ணா�® �ிரதம் நேற்று முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து புதிய போராட்டமாக இன்று முற்பகலில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆண்கள் கடலுக்குள் சற்று தொலைவிலும் பெண்கள் à ��ரைக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் கை கோர்த்து மனித சங்கிலியாக நின்று கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் லைப் ஜாக்கெட் அணிந்தபடி கடலுக்குள் இறங்கியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக இந்த போராட்டத்தில் இறங்கியிருப்பதால் அனேகமாக இது தினசரி போராட்டமாக உருவெடுக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. அனைவரும் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தà �¿ முழக்கமிட்டு வருகின்றனர்.
விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு
கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடற்படைக்குச் சொந்தமான கண்காணிப்பு விமானம் தாழப் பறந்து மீனவர்களை கண்காணித்து வருகிறது. இதேபோல் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றும் கூடங்குளம் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது. கூடங்குளம் à ��ணு உலை மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் பாதுகாப்பு கருதி கடற்படை விமானமும், கப்பலும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மெசேஜ் அனுப்பிய உதயகுமார்
இன்றைய போராட்டத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்தும் அவர் தலைமறைவாகவே இருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து வருவதாக தெரிகிறது. இதனிடையே தாமே போராட்டத்துக்கு தலைமை ஏற்று வருகிறேன்.. அதனால் போரட ்டத்தை உறுதியோடு முன்னெடுப்போம் என்று மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
Post a Comment