விக்ரம், திரிஷா ஜோடி� �ாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் "சாமி". இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமார் இந்தியில் "ரீமேக்" செய்கிறார். விக்ரம் கேரக்டரில் சஞ்சய்தத் நடிக்கிறார். கதாநாயகியாக திரிஷாவையே நடிக்க வைக்க ரவிக்குமார் விரும்பினார். இதற்காக திரிஷாவை அணுகி கால்ஷீட் கேட்டார். ஆனால் சஞ்சய்தத்துடன் நடிக்க அவர் மறுத்து விட்டார்.
திரிஷா ஏற்கனவே "காட்டா மீட்டா" இந்திப் படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இந� ��தி ரசிகர்களிடம் பிரபலமாகி உள்ளார். காட்டா மீட்டா படம் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. எனவே தான் இந்தி சாமியில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்தியில் தயாராகும் சாமி படத்தில் கதாநாயகியாக நடிக்ககேட்டு என்னை அணுகியதும், நான் மறுத்ததும் உண்மைதான். நான் 3 தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்� �ேன். வேறு படங்களில் நடிப்பதற்கு என்னிடம் கால்ஷீட் இல்லை. இந்தி சாமி படத்தில் நடிப்பதற்காக ஆகஸ்டு மாதம் வரை என்னிடம் தேதி ஒதுக்கித் தருமாறு கேட்டனர். எனவேதான் மறுத்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment