மாற்றான் படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். � ��ே.வி. ஆனந்த் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாற்றான் படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின் மென்ட் தயாரித்துள்ளது. படம் குறித்து கே.வி. ஆனந்த் கூறியதாவது:-
மாற்றான் படத்தில் எலிலன், விமலன் என இரு கேரக்டரில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்துள்ளார். வித்தியாசமான இரு சூர்யாக்களை இதில் பார்க்கலாம். ஒருவர் திருக்கு றள் போன்ற புத்தகங்களை படிக்கும் பண்புள்ள கேரக்டரிலும், மற்றவர் பார், கிளப் என திரியும் ஜாலி கேரக்டரிலும் வருகின்றனர்.
பிரெஞ்ச் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து சண்டைக் காட்சிகளை எடுத்துள்ளோம். உயர்தரமானதொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான சமூக பிரச்சினை ஒன்றும் படத்தில் உள்ளது. காதல், பாசம், சாகசம், காமெடி அனைத்தும் இருக்கும்.
மாற்றான் படத்துக்காக மூன்று டிரெய்லர் தயார் செய்துள்ளோம். இரு வேடங்களிலும் சூர்யா 5000 தடவைகள் மாறி மாறி நடித்துள்ளார். அவர் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். சில சீன்கள் திருப்தி இல்லாமல் இருந்தால் அவற்றில் மீண்டும் நடித்தார்.
ரஜினியை வைத்து நான் படம் இயக்கப் போவதாக வதந்திகள் பரவுகின்றன. அப்படி எந்த திட்டமும் இல்லை. ரஜினி படத்தை இயக்குவதற்கு என்னை நான் நிறைய தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment