ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா படங்கள் டிசம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக ரிலீசாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் பெரிய நடிகர� �ன் படம் ஒன்று வரப்போகிறது. இதனால் மாதந்தோறும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போகிறது.
அஜித்தின் பில்லா-2 படம் இந்த மாதம் வந்தது. கமலின் விஸ்வரூபம் பட வேலைகள் முடிந்துள்ளன. அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இப்படத்தை ரிலீசுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கிறது. ஓரிரு வாரங்களில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்தி பதிப்பிலும் வி ஸ்வரூபம் வருகிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாற்றான் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சூர்யா பிறந்தநாள் தினமாக வருகிற 23-ந்தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 14-ந்தேதி படம் ரிலீசாகும் என தெர� ��கிறது. இந்த படத்தில் சூர்யாக ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தாண்டவம் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. இப்படம் செப்டம்பர் 28-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலைப்புலி தாணு இயக்கத்தில் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படம் நவம்பர் 13-ந்தேதி தீபாவளி பண்டிகை அன்று ரிலீசாகிறது. இப்படத்துக்கு ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. அதை படமாக்கும் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
ரஜினியின் கோச்சடையான் படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு தற்போது டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ரஜினி பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஜப்பானில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது.
Post a Comment