பிரபுதேவா, டான்ஸர், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். இப்போது புதியதாக மற்றொரு அவதாரம் எடுக்கி� ��ார். ஆம், விளம்பர படம் ஒன்றை எடுக்கவிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான விராட் கோலியை வைத்து ஒரு ஆண்களுக்கான புதிய காலணி விளம்பரத்தை இயக்கவிருக்கிறார்.
பிரபுதேவா தமிழில் இருந்து தற்போது இந்திக்கு போய் இயக்குனராக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறார். இவர் இந்தியில் இயக்கிய 'ரவுடி ரத்தோர்', 'வாண்டட்' இரண்டு படங்களும் மெகா ஹிட்டானது.
முதன்முதலாக விளம்பர படம் எடுக்கும் பிரபுதேவா இதுகுறித்து கூறும்போது, இது என்னுடைய முதல் விளம்பர படம். ஒரு நிமிடத்திற்குள் ஒரு கதையை சொல்லிவிட வேண்டும் என்பது ஒரு ப� ��து அனுபவமாக இருந்தது. விராட் கோலியுடன் பணிபுரிந்தது ஜாலியாக இருந்தது. அவர் ஒரு இனிமையான மனிதர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரபுதேவா தற்போது இந்தியில் இன்னும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தில் நடிக்க பாலிவுட்டின் கிரிஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளனர்.
Post a Comment