கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா, கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து கடந்தாண்டு வெளியாடன சூப்பர் ஹிட் படம் 'கோ'. பத்திரிகை துறையில் இருக்கும் ஒருவர் நினைத்தால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாகிரெட்டி அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டிற்க� �ன விருதுகளில் 'கோ' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படப்பிரிவில் 'கோ' தேர்வு செய்யப்பட்டு நாகிரெட்ட� � விருது வழங்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகியோர் ரூ. 1 1/2 லட்சம் காசோலை பெற்றனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் கே.வி.ஆனந்த், கவிஞர் வைரமுத்து பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன், நடிகர் பிரபு, நடிகை நதியா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், வெங்கட்ராமரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment