ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அன்னா ஹசாரே குழுவை தொடர்ந்து பிரபல யோகா குரு பாபா ராம்தேவும் எம்.பிக்களை தாக்கி பேச தொடங்கியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான யாத்திரையை சத்தீஸ்கரில் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் எம்.பிக்களில் பலர் பணத்திற்கு அடிமைகளாக இருப்பதாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், கொள்ளையர்களாகவும், கொலையாளிகளாகவும் இருக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும், பாராளுமன்றத்தை காப்பாற்ற ஊழல் செய்பவர்களை பாராளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் குறித்தும் தொழிலாளர்கள் குறித்தும் அவர்களுக்கு எந்த கவலையும், அக்கறையும் இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இதற� ��கு பல அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
பிறரை குறித்து விமர்சிப்பதில் எப்போதும் தனி வழியை பின்பற்றும் அவர் கூறுகையில்: இவ்வாறு பேசுபவர்கள் மன நிலை குலைந்தவர்களாக த்தான் இருப்பர். ராம்தேவும் மனநிலை குலைந்தவரே. அவர் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

Post a Comment