ரஜினிகாந்த் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய படம் 'தளபதி'. மெகா ஹிட்டான இந்த படத்தின் பாடல்களும் மெகா ஹிட் தான். இந்த படத்தில் வரும் 'ராக்கம்மா கையத் தட்டு' என்ற பாடல் இன்றும் இளைஞர்களின் மொபைலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தளபதி படத்தின் பாடல் உரிமையை பெங்களூரைச் சேர்ந்த ஆடியோ நிறுவனம் ஒன்று 1991-களிலேயே ரூ75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இந்தியில் சாயிஃப் அலிகான் தயாரித்து நடிக்கும் படம் '� �ஜண்ட் வினோத்'. இந்த படத்தின் குறிப்பிட்ட பகுதியில் தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு பாடலை பலமுறை உபயோகப்படுத்தியிருக்கிறார்களாம்.
அந்த பாடலின் உரிமையை வைத்துள்ள எங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பாடலை உபயோகப்படுத்தியதற்காக ஏஜண்ட் வினோத் படக்குழுவினர் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடரப் போவதாக கூறியுள்ளனர். இதற்காக தங்களது வக்கீலுடன் ஆலோசித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் .
சினிமாவில் இது போன்ற பிரச்சனை வருவது புதியது இல்லை என்றாலும் அந்த பாடல் ரஜினி நடித்த படத்திலிருந்து எடுக்கப்பட்ட பாடல் என்பதால் ரசிகர்களிடையே இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
Post a Comment