திமுக தலைவர் கருணாநிதி பிறந்த மாதமான ஜூன் மாதத்தை இனி கலைஞர் மாதம் என்று அழைக்க திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ள� �ாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்கள் கிரேக்க, ரோமானிய மன்னர்கள் மற்றும் கடவுளர்கள் பெயரில் அழைக்கப்படுகின்றன.
இனி தி.மு.க மாணவரணியினர், திமுக தலைவர் பிறந்த ஜூன் மாதத்தை கலைஞர் மாதம் என்றே அழைப்பார்கள். எங்கு எழுதினாலும் பேசினாலும் இனி மாணவரணி ஜூன் மாதம் என்பது கலைஞர் மாதம் என்ற ே குறிப்பிடப்படும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாம். இது பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஜூன் மாதம் என்பதற்குப் பதில் கலைஞர் மாதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி,
- கலைஞர் மாதம் 3-ம் தேதி திராவிட இயக்க எழுச்சி நாள். பகைவர்கள் சூழ்ச்சிகளை வீழ்த்தி நம்மை அன்பால் ஆட்கொண்ட கருணாநிதியின் 89-வது பிறந்தநாள் விழாக்களை திராவிட இயக்க எழுச்சி நாளாக நாடு முழுவதும் கொண்டாட முடிவுசெய்யப்பட்டது.
- கலைஞர் மாதம் 3-ம் தேதியன்று அறிவாலய வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் 89 மாணவர� ��கள் கண்தானம் வழங்குதல் ஆகியவை திராவிட இயக்க எழுச்சி நாளின் முதல் தொடக்க நிகழ்வாக நடைபெறும்.
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை மூடி கிண்டியில் உள்ள ஒருமைப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைத்ததன் காரணமாக 5 இடங்களில் அண்ணாவின் பெயரை நீக்கியுள்ளத� ��ல் ஆராய்ச்சி மாணவர்களின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை முறையாக நடத்த வேண்டி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர் அணியின் சார்பாக ஜெயலலிதாவின் மாணவர் விரோத செயல்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் கல்வி வழங்குவதில் இடைஞ்சல் செய்து வந்தால் விரைவில் மிகப்பெரும் சரிவை சந்திக்க வேண்டி வரும் என இக்கூட்டம் எச்ச� �ிக்கை செய்கிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல அண்ணா பிறந்த செப்டம்பர் மாதத்தை அண்ணா மாதம் என்று அழைப்பார்களா என்று தெரியவில்லை.
Post a Comment