திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்க யாரும் மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று அக்கட்சியின் து ணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரியன் பெற்ற சுழல்பூமி' என்ற தலைப்பில் மாநில அளவிலான கவிதைப் போட்டியை திமுக இளைஞரணியினர் நடத்தினர். இதில் 1000க்கும் அதிகமானோர் கவிதைகள் எழுதியதால் அதில் சிறந்த 60 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து புத்தகம் தயாரிக்கப்பட்டது.
அந்த கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை அன்பகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் நூலை வெளியிட்டு பேசியதாவது,
தமிழர்கள் வரலாற்று செய்திகளை எல்லாம் மறந்துவி்ட்டனர். அதனால் தான் நாம் யார், நம்மை சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்று கூட தெரிவதில்லை. மேலும் நண்பனையும், எதிரியையும் கூட கண்டறிய முடியாமல் உள்ளது.
எனவே வரலாற்று நிகழ்வுகளை குறைத்து வைக்கும் பழக்கம் வேண்டும். அண்ணா காலத்து அரசியல் சூழல் வேறு, கலைஞர் கண்ட களக்காட்சி வேறு. நமது தளபதி இருக்கும் அரசியல் களம் அவற்றில் � ��ருந்து மாறுபட்டதாகும். எந்த ஆயுதத்தால் எதிரியை வீழ்த்தலாம் என்பதை தெரிந்தவர் தளபதி.
கடந்த 1967ம் ஆண்டு நான் கலைஞர் வீட்டுக்கு சென்றபோது தளபதி பத்து வயது பாலகன். தற்போது அவர் தோளுக்கு மேல் வளர்ந்த தோழன், இளைஞர்களின் எழுச்சி நாயகன், தொண்டர்களின் தளபதி. எதிர்காலத்தில் அவர் தமிழகத்தை வழிநடத்தினால் அவரை தலைவராக ஏற்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. அரசியல்வாதிக்கு தேவையான பணிவு தளபதியிடம் உள்ளது. அவரது வரலாற்றில் இந்த கவிதை நூல் ஒரு அத்தியாயமாக இருக்கும் என்றார்.
கவிதைப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த ஜீவாவுக்கு ரூ.25,000, இரண்டாவது இடத்தை� ��் பிடித்த கவிஞர் ஆதித்யாவுக்கு ரூ.15,000ம், மூன்றாவது இடத்தைப் பிடித்த வேங்கைகவிக்கு ரூ.10,000 வழங்கப்� �ட்டது. மேலும் சிறப்பாக கவிதை எழுதிய 60 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment