293-வது ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்� ��ட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சுவாமிகள் கூறுகையில், நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவை அழைத்து செல்வதாக தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த நித்யானந்தா கூறியதாவது:-
நான் காஞ்சி மடத்தை மதிக்கிறேன். யாரோ கொடுத்த தவறான தகவலின் அடிப் படையில் காஞ்சி பெரியவர் தவறுதலாக கூறி இருக்கிறார். நான் நடிகை ரஞ்சிதாவை எங்கு சென்றாலும் அழைத்து செல்வதாக கூறி இருக்கிறார். ரஞ்சிதா என்னுடன் இல்லை. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருகிறார் என்று கூறுவது தவறு. இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து விளக்க தயாராக இருக்கிறேன்.
மதுரை ஆதீனமாக நான் பட்டம் சூடிய விச� �த்தில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட யாரும் தலையிட வேண்டாம். அவர் தெரிவித்த கருத்துக்களை 10 நாட்களில் திரும்பபெற வேண்டும். இப்போது என்னை எதிர்ப்பவர்கள் விரைவில் என் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து ஆதரிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியதாவது:-
காஞ்சி சங்கராச்சாரியார் மதுரை ஆதீன விவகாரத்தில் தலையிடக்கூடாது. அவர் கூறிய கருத்துக்கள் அவருக்கு தேவையில்லாத ஒன்று. இதனை கடுமையாக எதிர்க்கிறோம். அவரது கருத்துக்கள் சைவ சமயத்திற்கு நல்லதில்லை என்று எச்சரிக்கிறோம். 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை பட்டம் சூட்டியதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக எழுப்பப்படும் எந்த விமர்சனத்தையும் ஏற்கமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment