ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 126 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார � �ெற்றிப் பெற்றது. துவக்கம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ஷான் வாட்சன் அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஐபிஎல் 5 தொடரின் இன்று புனேயில் நடைபெற்ற போட்டியில் புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் வென்ற புனே வாரியர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து க� �மிறங்கியது. ஆனால் துவக்க முதலே ரன்களை குவிக்க திணறியது.
5 ஓவர்கள் வரை ரன் சேர்ப்பில் மந்தமாக செயல்பட்ட துவக்க வீரரான கேப்டன் கங்குலி 16 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் மைக்கேல் கிளார்க் 16 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார்.
அதன்பிறகு ராபின் உத்தப்பா உடன் ஜோடி சேர்ந்த மஜூம்தார் அடுத்தடுத்து 2 சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அவரது ஆட்டம் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 30 ரன்களை சேர்த்த மஜூம்தார் போல்டானார். பொறுப்பாக ஆடி வந்த ராபின் உத்தப்பா 13 ரன்களில் கேட்ச் கொட� �த்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஆஞ்சிலோ மேத்யூஸ் ஒரிரு ரன்களாக சேர்த்த நிலையில், 11 ரன்கள் எடுத்த நிலையில் ஓவைஸ் ஷாவின் குறி தவறாத த்ரோவில் ரன் அவுட்டானார். மித்துன் 11 ரன்களில் போல்டானார். கடைசி வரை அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்ற ஸ்டீவன் ஸ்மித் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 125 ரன்களில் சுருண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் ஷான் டைட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
126 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் துவக்கத்திலேயே துவக்க வீரர் ரஹானே டக் அவுட்டாகி வெளியேறினார். பொறுப்பாக ஆடி வந்த கேப்டன் ராகுல் டிராவிட் 14 ரன்களில் அவுட்டானார்.
அதன்பிறகு வந்த ஷான் வாட்சன் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த அசோக் மெனாரியா 18 ரன்களில் அவுட்டானார். எளிய இலக்கை விரட்டிய ஷான் வாட்சன் 51 பந்துகளில் 4 சிக்ஸ், 10 பவுண்டரிகள் அடித்து 90 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
ஷான் வாட்சனின் அதிரடி ஆட்டம் மூலம் 16.2 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி இலக்கை எட்டியது.
Post a Comment