குடியரசுத் தலைவர் பதவிக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் சிறந்த நபர் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின ்ஹா தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடக்கிறது. அதற்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அல்லது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி நிறுத்தும் என்று எதிர்பார� ��க்கப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில்,
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு சிறந்த நபர். அவர் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்களிலேயே சிறப்பாக செயல்படும் ஒரே அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான். அதனால் பிரணாபை தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறோம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த நாட்டுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறோம் என்று ஒரே வாழ்த்து மழையாகப் பொழிந்தார்.
இதைக் கேட்ட பிரணாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மற்றவர்களும் சிரித்தார்கள். பிரணாப் தனது இருக்கையில் இருந்து எழுந்து, ஆக மொத்தம் நிதியமைச்சகத்தில் இருந்து என்னை ந� �க்க முடிவு செய்துவிட்டீர்கள் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
ஹமீது அன்சாரி அல்லது பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்தினால் அவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தெரிவித்ததற்கு நேர்மாறாக யஷ்வந்த் சின்ஹா பிரணாபை புகழ்ந்து தள்ளியுள்ளார் என்பது கு� �ிப்பிடத்தக்கது.
Post a Comment