நயன்தாராவின் பாங்காக் பயணம் ஏகப்பட்ட வதந்திகளைக் கிளறிவிட்டுள்ளது. இந்தப் பயணம் தொடர்பாக வந்துள்ள மூன்றாவ� �ு வதந்தி இது...
இந்தப் பயணம் சாதாரணமாக நடந்ததல்ல... பல லட்சம் ரூபாய் பணம் கடத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வரும் செய்திகளுக்கு மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லி வருகிறார் நயன்தாரா.
நடிகை நயன்தாரா பாங்காங் சுற்றுப்பயணம் சென்று விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அவருடன் மானேஜர் ராஜேஷ், மேக்கப் மேன் ராஜு ஆகியோரும் வந்தனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நயன்தாராவை மடக்கி விசாரணை நடத்தியதாகவும், அவரது மேனேஜர் ராஜேஷ், மேக்கப்மேன் ராஜு ஆகியோரிடமும் தனித் தனியாக விசாரணை நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. காரணம் நயன் மேனேஜர் எனப்படும் ராஜேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராம். இவரை நயன்தாராவுக்கு பிரபுதேவாதான் மேனேஜராக்கினாராம்.
நயன்தாராவும் ராஜேஷும் பாங்காங் சென்ற போது ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாகவும், எனவேதான் அவர்கள் சென்னை திரும்பிய போது சுங்க அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் கூறப்பட்டது. அந்த ரூ 20 லட்சம் எடுத்துச் சென்றது எதற்காக என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்களாம் அதிகாரிகள்.
இந்த வதந்திக்கும் நயன்தாரா பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் பாங்காக் போய் வந்தது குறித்து வரும் மூன்றாவது வதந்தி இது.
பாங்காங் சென்ற போது ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துச் செல்லவில்லை. அவ்வளவு பெரிய தொகையை விமானத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள். விமான நிலையத்தில் எனக்கு நடந்தது சாதாரணமான பாதுகாப்பு சோதனைதான் என்றால் ஏன் யாரும் நம்ப மறுக்கிறீர்கள். இது உங்களுக்கும் கூட நடக்கலாம்," என்றார்.
Post a Comment