News Update :
Home » » தொலைந்து போகும் குழந்தைகளை மொபைல்போன் மூலம் கண்டுபிடிக!

தொலைந்து போகும் குழந்தைகளை மொபைல்போன் மூலம் கண்டுபிடிக!

Penulis : karthik on Tuesday 8 May 2012 | 22:06





பள்ளிக்குச் சென்ற தமது குழந்தைகள் மாலை நேரம் சரியான நேரத்தில் வீடு திரும்பவில்லை என்றால் அந்த நேரம் பெற்றோர்கள் அடையும் துன்பத்திற்கும் பரபரப்பிற்கும் அளவே இருக்காது. அப்படி ப்பட்ட துயராமான தருணத்தை போக்குவதற்காக ஒரு புதிய அப்ளிகேசன் வர இருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா ஜார்ஜியாவில் ஒரு 14 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான். இதை அறிந்த அவனுடையத் தாயார் தனது ஸ்மார்ட்போன் மூலம் பேமிலி ட்ராக்கர் என்ற அப்ளிகேசனைப் பயன்படுத்தி தனது மகன் இருக்கும் இடத்தைக் � ��ண்டுபிடித்து விட்டார். அதன் மூலம் அவர்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி திரும்பியது.
இந்த பேமிலி ட்ராக்கரைப் போல ஏராளமான அப்ளிகேசன்கள் உள்ளன. அதன் மூலம் தொலைந்து போன தங்களது அன்புக்குரியவர்களை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
பேமிலி ட்ராக்கரை உருவாக்கியவரான ராபர்ட� � ப்ரான்சஸ்டி கூறும் போது, இந்த பேமிலி ட்ராக்கர் அப்ளிகேசன் மூலம் நமது தொலைந்து போன உறவினர்களை மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்றி கூறுகிறார். மேலும் இந்த அப்ளிகேசனுக்கு உலக அளவில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பதாகக் கூறுகின்றார்.
 பேமிலி ட்ராக்கர் அப்ளிகேசன் 
செல்லவும் இங்கே.!


இந்த அப்ளிகேசன் மூலம் தொலைந்து போன தங்களது குழந்தைகளின் இடத்தைக் கண்டு பிடிக்க முடியும். அவர்களுக்கு செய்தி அனுப்ப முடியும். அதுபோல் அவர்களின் மொபைல்களுக்கு ரிமோட் மூலம் அலார்மை ஆக்டிவேட் செய்ய முடியும்.
இந்த சேவையை வெப் மூலமாக பயன்படுத்த முடியும். இந்த அப்ளிக� ��சன் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் இயங்கும் வசதி கொண்டவை. மேலும் இந்த பேமிலி ட்ராக்கர் 2 வாரங்களுக்கான டேட்டா பேசையும் கொண்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 2 வாரங்களாக தொலைந்து போன குழைந்தை எங்கே இருந்தது மற்றும் என்ன செய்தது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த அப்ளிகேசன்களில் உள்ள குறைகளைவிட இதில் ஏராளமான நிறைகள் உள்ளன. இந்த அப்ளேகேசனைப் போன்ற கடந்த வருடம் ஜப்பானில் சுனாமி வந்த போது லைப்360 என்ற அப்ளிகேசன் உருவாக்கப்பட்டது. இந்த அப்ளிகேசன் காணாமல் போன பலரையும் இணைத்து வைத்தது.






Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger