அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் சுட்டு கொல்� �ப்பட்டார். அமெரிக்காவின் நேவிசீல் ராணுவ பிரிவினர் இந்த ஆபரேசனை வெற்றிகரமாக முடித்தனர்.
பின்லேடன் உடலை புதைத்தால் அந்த இடத்தில் அவரது ஆதரவாளர்கள் நினைவு சின்னம் அமைக்க கூடும் என கருதி அவரது உடலை உறவினர்களிடம் அமெரிக்கா வழங்கவில்லை. மாறாக போர்க்கப்பலில் உடலை எடுத்து சென்று ஆழ் கடலில் புதைத்து விட்டனர். ஆனால் எந்த கடலில் உடல் புதைக்கப்பட� �டது என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே பின்லேடன் கொல்லப்பட்ட ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சமீபத்தில் பின்லேடன் அடக்கம் செய்யப்பட்ட படம் வெளியிடப்பட்டது. இருந்தாலும் உடல் புதைக்கப்பட்ட கடல் எது என்று கண்டறிய முடிய வில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பில் வார்ரென் என்பவர் பின்லேடன் உடல் அரபிக்கடலில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் அருகே 320 கி.மீட்டர் தூரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என � �ூறியுள்ளார்.
ஏனெனில் இவர் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் இருந்து புதையல் வேட்டை நடத்தி வருகிறார். இது குறித்து ஸ்பெயின் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
பின்லேடன் உடலை கடலில் அடக்கம் செய்த போட்டோவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் வெளியிட்டது. அதை வைத்து பார்க்கும் போது அது அரபிக்கடல் போன்று தெரிகிறது. மேலும் குஜராத் மாநிலம் சூரத் கிழக்கே 320 கி.மீட்டர் ஆழத்தில் அவர் ஜலசமாதி செய்யப்பட்டிருக்கலாம். அவரது உடலையும� �� அது வைக்கப்பட்டிருந்த பெட்டியையும் நான் மீட்பேன். அதற்கான நடவடிக்கையை வருகிற ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறேன். இதற்கு ரூ.1 கோடி வரை செலவாகும்.
நான் அமெரிக்காவின் தேச பக்தன். பின்லேடன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தெளிவாக காட்டுவதில் ஒபாமா தோல்வி அடைந்தார். எனவேதான் அந்த முயற்சியில் நான் ஈடுபட்டு இருக்கிறேன். இப்பணியில் 3 மாதங்கள் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment