ரசிய புரட்சியாளர் விளாடிமிர் லெனினை அவரது தோழரான ஜோசப் ஸ்டாலின்தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக புதுகதை ஒன்� ��ு கிளம்பி உள்ளது.
கம்யூனிச சித்தாந்தத்தின் மூலம் புரட்சியை உருவாக்கியவர் விளாடிமிர் லெனின். ரசியாவில் வீரஞ்செறிந்த புரட்சியை நடத்தியவர். ரசிய அதிபராக லெனின் இருந்த காலத்தில் அவருக்குப் பின் அதிபர் பொறுப்பேற்கக் கூடிய வகையில் செல்வாக்குமிக்க மனிதர்களாக இருந்தவர்கள் ஸ்� �ாலின் மற்றும் டிராட்ஸ்கி.
தொடக்க காலத்தில் லெனின், ஸ்டாலினை ஆதரித்ததாகவும் பின்னர் டிராட்ஸ்கிதான் தமக்குப் பின்னர் சரியான நபர் என முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் ஸ்டாலினின் சர்� ��ாதிகாரத்தனத்தை அவர் விமர்சித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டாலினை நீக்கவும் லெனின் முடிவு செய்திருந்ததாகவும் கூறுகிறார் ரசிய வரலாற்று ஆய்வாளர் லெ லுரி.
இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், விஷத்தைக் கொடுத்து லெனினை கொலை செய்ததாகவும் எப்பொழுதுமே தமது எதிரிகளை ஒழித்துக் கட்ட ஸ்டாலின் விஷத்தைத்தான் கையிலெடுப்பார் என்று� �் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
இத்தோடு விட்டுவிடாத லுரி, இந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் வழி இருக்கிறது.. ஏனெனில் லெனினின் பதப்படுத்தப்பட்ட மூளை இன்றும் மாஸ்கோவில்தானே இருக்கிறது என்றும் ஒ ரே போடாய் போடுகிறார். இதற்கெல்லாம் ஆதாரமாக அவர் பேசுவது லெனினின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்துத்தான்! லெனின் பிரேத பரிசோதனை அறிககையில் மூளை மிகவும் கடினமாகிப் போயிருந்தது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும் இதுவரை எப்படிக் கடினமாகிப் போனது என எவரும் சொல்லவில்லை என்பதாலே மர்மம் நீடிக்கிறது என்றும் லுரி சொல்கிறார்.
புரட்சியாளர்களுக்கு எப்பொழுதும் சகாக்களே சங்கட கர்த்தார்க்கள் என்பதே நிதர்சனம் போல...
Post a Comment