தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்த ுள்ளதாக வெளியாகும் செய்திகளால் பல அமைச்சர்கள் கலக்கமடைந்து போயுள்ளனர்.
அதிமுகவில் சசிகலா, ராவணன் உள்ளிட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மட்டும் போயஸ் கார்டன் திரும்பியுள்ளார். அப்போதே அமைச்சரவை மாற்றம் என்று பேச்சு அடிபட் டது. ஆனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக அமைச்சரவையை மாற்றியமைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நடப்புக் கூட்டத்தொடர் மே 10-ந் தேதி முதல் மே 13-ந் தேதிக்குள் முடிவடைய உள்ளது.
கூட்டத்தொடர் முடிந்த கையோடு ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து அமைச்சரவை மாற்ற லிஸ்ட்டை ஜெயலலிதா கொடுப்பார் என்று கூறப்படுகிறது. அனேகமாக பல அமைச்சர்கள் பத வி இழக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் அமைச்சரவை எண்ணிக்கையை 27 ஆகக் குறைத்துக் கொள்ளவும் ஜெயலலிதா திட்டமிட்� �ுள்ளதாகத் தெரிகிறது.
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரைத் தவிர மற்ற அமைச்� ��ர்கள் அனைவருக்குமே கல்தா கொடுத்துவிடுவார் ஜெயலலிதா என்கிறது கோட்டை வட்டாரம். இதனால் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். அமைச்சர்களோ பதவி பறிபோகிறதே என கலங்கிப் போய் கிடக்கின்றனர்.
தற்போது அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றினால் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்படும் 7-வது அமைச்சரவை மாற்றமாக இருக்கும்.
Post a Comment