செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் பிஸியாக இருந்தார் ஆர்யா. இப்போது ஆர்யா இல்லாத படக்காட்சிகள் கோவாவில் படமாகிக் கொண்டிருக்கும் வேலையில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கியுள்ளார் நமது இரண்டாம் உலக நாயகன்.
அந்த வீட்டின் கிரஹவப்பிரவேசத்திற்கு அனைத்து நண்பர்களையும் அழைக்காமல் தனது நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்துள்ளார் ஆர்யா. புதுவீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவது தானே சம்பிரதாயம். அதன் படியே குத்துவிளக்கு ஏற்ற அனைவரும் காத்திருந்த போது இந்த
நிகழ்ச்சிக்கு வந்திருந்த நயன்தாரா தான் அந்த குத்துவிளக்கை ஏற்றியுள்ளார்.
தனது கேரள நட்பை மறக்காத ஆர்யா குத்துவிளக்கு ஏற்றப்பட்ட பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார். வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்திற்கு(காதல் தோல்வி) பின்
நயன்தாரா சென்னை வருவது இதுவே இரண்டாவது முறை. பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா மேலும் பல கதைகளை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறாராம்.
பிரபுதேவாவுடன் காதலை முறித்துக் கொண்ட நயன்தாரா இப்போது ஆர்யா வீட்டின் விசேஷத்திற்கு வந்திருப்பது பற்றி அரசல் புரசலாக பேசிக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம் ஏரியா.
அட! சேட்டனும் சேச்சியும் நட்பா இருக்கிறதுல அப்படி என்னப்பா ஆச்சரியம்!
Post a Comment