
நடிகை ஷகிலா புதிய படமொன்றில் பீரானந்தி ஸ்வாமியாக நடிக்கிறார். மலையாள கவர்ச்சிப் படங்களில் நடித்து வந்த ஷகீலா கடந்த சில ஆண்டுகளாக அந்த மாதிரியான படங்களில் நடிப்பதில்லை. தமிழ் சினிமாவில் கவுரவ தோற்றங்களில் நடித்து வரும் அவர், தற்போது தமிழ் படம் ஒன்றில் சாமியார் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சாமியாரின் பெயர் பீரானந்தி. பீர் குடித்துவிட்டு குறி சொல்லும் கேரக்டர் ஷகீலாவுக்கு.
ஆசாமி என்ற பெயரில் இந்தப் படம் தயாராகி வருகிறது. படத்தில் போலி சாமியாராக நடிக்கிறார் ஷகீலா. சாமியார்களை சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கப் போகும் இந்த ஆசாமி படத்தை ஏழுமலையான் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
home
Home
Post a Comment