
ஜான்கார்டன். மாவீரன் என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகிறது. ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் செலவில் தயாரான ஆங்கில படம் ஜான்கார்டர். ஜான்கார்டன் அமெரிக்க படையை சேர்ந்த வீரன் பல நாடுகளில் போர் புரிந்த பிறகு தனது வாழ்க்கையை சுரங்கத்தை தேடுவதில் அர்ப்பணிக்கின்றான். ஒரு தேடுதலில் ஆதிவாசிகளால் துரத்தப்பட்டு ஒரு குகைக்குள் நுழைகிறான். அந்த குகைக்குள் அற்புத நிகழ்வு நடக்கிறது. மாற்று கிரகத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான். அந்த கிரகத்தில் அபரிமித சக்தி கிடைக்கிறது. அங்குள்ள பயங்கர மிருகங்களுடன் போரிட்டு அந்த கிரகவாசிகளை காப்பாற்றுகிறான். பறக்கும் கப்பல், அபூர்வ இரட்டை விமானம், 12 அடி உயர மனிதர்கள், வினோத விலங்குகள் என படம் முழுக்க கிராபிக்ஸ் பிரளயம் நடத்தி உள்ளனர். இப்படத்தைஆண்ட்ரு ஸ்டான்டன் இயக்கி உள்ளார். மார்ச் 9ம் தேதி தமிழக மெங்கும் ரிலீசாகிறது.
Post a Comment