நடிகர் தனுஷ், இந்தியில் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் இளம் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க இருக்கிறார். கொலவெறி பாடல் மூலம் பிரபலமான நடிகர் தனுஷூக்கு இந்தி படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனந்த எல்.ராய் இயக்கும் இப்படத்திற்கு ராஞ்ஜா என்று பெயரிட்டுள்ளனர். காசியை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷூக்கு ஏற்ற நாயகியை தேடி வந்தார் டைரக்டர்.
இந்நிலையில் நடிகர் அனில் கபூரின் மகளும், பாலிவுட்டின் இளம் நாயகியுமான சோனம் கபூர், தனுஷூக்கு ஜோடியாக்க நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய அப்பாவை போல, சோனமும் தென்னிந்திய படவுலகில் தொடர்பு வைத்து கொள்ள விரும்பவதால், அவர் இந்தபடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே 2 இந்தி படங்களில் சோனம் கபூர் நடித்து வருவதால், தனுஷ் படத்துக்கு கால்ஷீட் தருவதில் பிரச்னை எழும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Post a Comment