ஜெயம் ரவியை வைத்து சமுத்திரகனி இயக்கும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
பிரபு தேவாவைத் தி்ருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறி, சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்த நடிகை நயன்தாரா, இப்போது பிரபுதேவாவுடன் டூ விட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து மீண்டும் நடிப்புக் கடலில் குதித்துள்ளார் நயனதாரா.
தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜீத்தின் பில்லா 2 படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போவார் என்று கூறப்படுகின்றது. சிம்பு கூட மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடப்பதாகவும் பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் சமுத்திரகனியின் படத்தில் நயனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. சமுத்திரகனி தற்போது கன்னட படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதை முடித்த பிறகு தமிழில் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதில் ரவிக்கு ஜோடியாக திரையுலகிற்கு மறுபிரவேசம் செய்துள்ள நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
முதன்முறையாக ரவி, நயன்தாரா ஜோடி சேரவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நயன் மீண்டும் நடிக்க வந்ததையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. வெள்ளித்திரையில் மீண்டும் நயனைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.
சும்மாவா, ஒரு கோடி வாங்கிய ஒய்யாரமான ஹீரோயினாச்சே, மறுபடியும் நடிக்க வந்தால் விடுவார்களா என்ன…!
Post a Comment