News Update :
Home » » இடிந்த கரையோரம் இடிந்து போன நம்பிக்கை

இடிந்த கரையோரம் இடிந்து போன நம்பிக்கை

Penulis : karthik on Tuesday, 20 March 2012 | 23:42

 
 

  • உதயகுமார் போராட்ட ஒருங்கிணைப்பாளர் 55
  • சிவசுப்பிரமணியன் போராட்டக்குழு உறுப்பினர் 44
  • ஜெயக்குமார் இடிந்தகரை சர்ச் பாதிரியார் 41
  • ஏ.எஸ்.ரவிபோராட்டக்குழு உறுப்பினர் 33
  • முத்துராஜ் கூடங்குளம் பஞ்.,தலைவர் 33
  • ராஜலிங்கம் பா.ஜ., நிர்வாகி 34
  • மைபா ஜேசுராஜன் சேரன்மகாதேவி பாதிரியார் 22
  • சுசிலன் கூட்டப்புளி பாதிரியார் 4
  • பதேயூஸ்ராஜன் கூடங்குளம் பாதிரியார் 4
  • ரட்சகநாதன் கூத்தன்குழி பாதிரியார் 2
  • இவான் அம்ப்ரோஸ் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் 2
  • சகாயராஜ் இடிந்தகரை போராட்டக்குழு 35
  • பெருமாள்சாமி கூடங்குளம் போராட்டக்குழு 19
  • புஷ்பராயன் கிறிஸ்தவ மக்கள் இயக்கத் தலைவர் 7
  • சகாய இனிதா மீனவர் அணி, இடிந்தகரை 36

இவை எல்லாம் என்ன என்று பார்க்கிறீர்களா? முதலில் பெயர்,அடுத்து பதவி அடுத்து அவர்கள் மீது இதுவரை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு விபரம்.இதுவரை இவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் இருந்த முதல்வர் ஜெயல்லிதா தற்ப்போது அணூலைக்கு ஆதரவாளராகி விட்டதால் இவர்கள் மீதான வழக்குகள் அடிப்படியில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக,அப்பகுதி மக்களை பயமுறுத்திபொருளாதார சீர்குலைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக, உதயகுமார் குழுவினர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம், ஆறு மாதங்களுக்குப் பின், நேற்று முடித்துவைக்கப்பட்டது.தமிழ் நாடு ஜெயலலிதா அரசு இந்த அளவு போராட்டத்தை வளர்த்து வேடிக்கைப்பார்த்துவிட்டு ஆறு மாதங்களுக்குப்பின் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதுவரை ஜெயலலிதா தங்களுக்கு ஆதரவாக உள்ளார் என்று மெத்தனத்திலும்-உற்சாகத்திலும் இருந்த இடிந்தகரை மக்கள் இப்போது இடிந்து போயுள்ளனர். சட்டத்திற்கு எதிராக, நாட்டு நலனுக்கு எதிரான போராட்டத்தில் உதயகுமார் தலைமையிலான குழுவினர், போராட்டம் நடத்தியதாக இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
 
இடிந்தகரை லூர்து ஆலய வளாகத்தில் முகாமிட்டு, அணுஎதிர்ப்பு போராட்டம் நடத்தும் உதயகுமார், தனது சொந்த ஊரான நாகர்கோவிலை விட்டுவிட்டு, இடிந்தகரை மக்களின் பாதுகாப்பில், தற்போது உள்ளார்.
அணுஉலை விஞ்ஞானிகளை வழி மறித்தது, அணுஉலை முன், போலீஸ் உயரதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, அனுமதி வாங்காமல் ஆறு மாத கால போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில், உதயகுமார் மற்றும் அவரது குழுவினர் மீது சுமத்தப்பட்டுள்ளது..
உதயகுமார் குழுவினர் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்தோர் மீது, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், 240 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில், இந்திய இறையாண்மை, தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், உதயகுமார், புஷ்பராயன், பாதிரியார் ஜேசுராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் உள்ளன.இந்த வழக்குகளின் மீது,இனி தமிழக போலீசார் மத்திய அரசின் வழிகாட்டுதலில் நடவடிக்கை மேற்கொள்வர் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கடவுசீட்டுகளை, இந்தியக்குடியுரிமை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். கடல்வழியே உதயகுமார் தப்பித்து விடாமல் தடுக்க, கடலோரப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவ கிராமங்களில் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர்.
 
உதயகுமாரின் போராட்டத்தால், ஆறு மாதங்களில், தினமும், ஐந்து கோடி ரூபாய் வீதம், 900 கோடி ரூபாய் அணுமின் கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க செய்த போராட்டமாகவே மத்திய அரசு கருதுகிறது. உதயகுமாரை கைது செய்து, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நிரந்தரமாக சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தொடர்பான தகவல்கள்தெரிவிக்கிறது.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களைச் சுற்றி சோதனை சாவடிகள்,சாலையில் தடைகள் அமைக்கப்பட்டு, சோதனை நடந்து வருகிறது.
இன்று இரவு அநேகமாக கைது படலம் ஆரம்பமாகலாம்.ஜெயலலிதா அரசு தங்களுக்கு ஆதரவு தருகிறது என்று இருந்த போராட்டக்குழுவிறகு இது சம்மட்டியடி.இதுவரை தமிழக காவ்ல்துறையும்,வருவாய்துறையும் உதயகுமாருக்கு பாதுகாப்பாகவும்,அவர் கூறியபடி அணு உலைக்கு பணிக்கு சென்றவர்களை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பணிக்கு

செல்லவிடாமல் தடுத்தது.அணு உலை அருகே தடை செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் போராடவும் ,பணிக்கு செல்பவர்களை கண்காணிக்க அறையை அமைக்கவும் பாதுகாப்புக்கொடுத்தது ஆனால் அதை இன்று அவர்களே அகற்றி எறிந்துள்ளனர்.
எல்லாம் நன்மைக்கே.முன்பே ஜெயலலிதா முறையாக நடந்திருந்தால் போராட்டம் இவ்வளவு தீவிரமாக வளர்ந்திருக்காது என்பதுதான் சுற்றியுள்ள இடங்களில் உள்ளவர்கள் கருத்து.
___________________________________________________________________________________________________________
 
 

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger