சில சமயம் சினிமாக்காரர்கள் அடிக்கிற பல்டியைப்பார்த்து, அரசியல்வாதிகளே வெட்கித்தலை குனிவதுண்டு.அந்த வகையில் இயக்குனர் அமீர் அடித்திருக்கும் ஒரு பல்டி சரித்திரச்சிறப்பு வாய்ந்தது.கடந்த வாரம் ஃபெப்ஸி ஊழியர்கள் சிலரைக்கைக்குள் போட்டுக்கொண்டு தயாரிப்பாளர் ஞானவேலின்' அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பை நிறுத்திய செய்தியை ஹல்லோதமிழ்சினிமாவில் தான் முதல் முதலாக எழுதியிருந்தோம்.
அதை ஒட்டி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொடர்ந்து அமீருக்கு குடைச்சல் தந்துகொண்டே இருந்தார்கள். இன்று ஒரு நாள் அடையாள படப்பிடிப்பு நிறுத்தமும், அமீரும் ஃபெப்ஸி ஊழியர்களும், தயாரிப்பாளர் ஞானவேலுவுக்கு எதிராக நடந்துகொண்டதை ஒட்டித்தான்.இந்நிலையில் தனக்கு எதிரான விமரிசனக்குரல்கள் கவுன்சிலில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரவே,அதை திசை திருப்ப எதையாவது செய்யவேண்டுமே என்ற முடிவில், அசிஸ்டெண்ட் டைரக்டர்களின் ஆபத்பாந்தவனாக, நேற்று திடீரென்று அவதாரம் எடுத்தார் அமீர்.
ஃபெப்ஸி தொழிலாளர்களின் கோரிக்கைகளை விசாரித்துவரும் தொழிலாளர் ஆணையத்தின் முன் அனைத்து உதவி இயக்குனர்களையும் அணிதிரளும்படி அமீர் செய்தி அனுப்ப, பாவம் உதவி இயக்குனர்கள் அமீரின் சூழ்ச்சி புரியாமல் 'ஆஹா, அமீருக்கு நம்ம மேல அக்கறை வந்துருச்சி' என்ற படி அணிதிரள ஆரம்பித்திருக்கிறார்கள்.
தன் சொந்த அரசியலுக்காக, வாழ்க்கையில் நொந்த உதவி இயக்குனர்களப்பயன்படுத்த அமீர் நினைப்பதைப் பார்க்கும்போது, தலைப்பில் உள்ள அமீர் படப்பாடல்தான் நினைவுக்கு வந்து தொலைகிறது.
Post a Comment